Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரியாத் - Page: 6

Adh-Dhariyat

(aḏ-Ḏāriyāt)

௫௧

وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۗ اِنِّيْ لَكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ ٥١

walā tajʿalū
وَلَا تَجْعَلُوا۟
ஏற்படுத்தாதீர்கள்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan ākhara
إِلَٰهًا ءَاخَرَۖ
வேறு ஒரு கடவுளை
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُم
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
அவனிடமிருந்து
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
mubīnun
مُّبِينٌ
தெளிவான(வர்)
அல்லாஹ்வுடன் வேறொரு வணக்கத்திற்குரிய நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவன் புறத்தால் உங்களுக்கு (இதைப்பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கின்றேன். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௧)
Tafseer
௫௨

كَذٰلِكَ مَآ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ٥٢

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
mā atā
مَآ أَتَى
வந்ததில்லை
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு
min rasūlin
مِّن رَّسُولٍ
ஒரு தூதரும்
illā qālū
إِلَّا قَالُوا۟
இவர்கள் கூறாமல்
sāḥirun
سَاحِرٌ
ஒருசூனியக்காரர்
aw majnūnun
أَوْ مَجْنُونٌ
அல்லது ஒரு பைத்தியக்காரர்
இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று கூறாமலிருக்கவில்லை. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௨)
Tafseer
௫௩

اَتَوَاصَوْا بِهٖۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَۚ ٥٣

atawāṣaw
أَتَوَاصَوْا۟
இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா?
bihi
بِهِۦۚ
இதை
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
இவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
ṭāghūna
طَاغُونَ
வரம்பு மீறிய(வர்கள்)
(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம் பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! அன்று. அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக்கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௩)
Tafseer
௫௪

فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ اَنْتَ بِمَلُوْمٍ ٥٤

fatawalla
فَتَوَلَّ
ஆகவே விலகுவீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
famā anta
فَمَآ أَنتَ
நீர் இல்லை
bimalūmin
بِمَلُومٍ
பழிக்கப்பட்டவராக
(நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீங்கள் நிந்திக்கப்பட மாட்டீர்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௪)
Tafseer
௫௫

وَذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ ٥٥

wadhakkir
وَذَكِّرْ
நீர் நல்லுபதேசம் செய்வீராக!
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
நல்லுபதேசம்
tanfaʿu
تَنفَعُ
பலனளிக்கும்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௫)
Tafseer
௫௬

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ ٥٦

wamā khalaqtu
وَمَا خَلَقْتُ
நான் படைக்கவில்லை
l-jina
ٱلْجِنَّ
ஜின்களையும்
wal-insa
وَٱلْإِنسَ
மனிதர்களையும்
illā
إِلَّا
தவிர
liyaʿbudūni
لِيَعْبُدُونِ
அவர்கள் என்னை வணங்குவதற்கே
ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௬)
Tafseer
௫௭

مَآ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَآ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ ٥٧

mā urīdu
مَآ أُرِيدُ
நான் நாடவில்லை
min'hum
مِنْهُم
அவர்களிடம்
min riz'qin
مِّن رِّزْقٍ
எவ்வித உணவையும்
wamā urīdu
وَمَآ أُرِيدُ
நான் நாடவில்லை
an yuṭ'ʿimūni
أَن يُطْعِمُونِ
அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்க வில்லை. அன்றி, எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (ஆகவே,) ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௭)
Tafseer
௫௮

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ ٥٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-razāqu
ٱلرَّزَّاقُ
(எல்லோருக்கும்) உணவளிப்பவன்
dhū l-quwati
ذُو ٱلْقُوَّةِ
பலமுள்ளவன்
l-matīnu
ٱلْمَتِينُ
மிக உறுதியுடையவன்
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௮)
Tafseer
௫௯

فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ ٥٩

fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களுக்கு
dhanūban
ذَنُوبًا
பெரிய பங்குண்டு
mith'la
مِّثْلَ
போல
dhanūbi
ذَنُوبِ
பெரிய பங்கு
aṣḥābihim
أَصْحَٰبِهِمْ
அவர்களின் கூட்டாளிகளுடைய
falā yastaʿjilūni
فَلَا يَسْتَعْجِلُونِ
ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கிருந்த (நன்மை தீமையை அளக்கக்கூடிய) அளவுப்படியைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப்படிகளுண்டு. (அவைகள் நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், நீங்கள் அவசரப்படாதீர்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௯)
Tafseer
௬௦

فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِيْ يُوْعَدُوْنَ ࣖ ٦٠

fawaylun
فَوَيْلٌ
ஆகவே, நாசம் உண்டாகட்டும்
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
min yawmihimu
مِن يَوْمِهِمُ
அவர்களின் நாளில்
alladhī yūʿadūna
ٱلَّذِى يُوعَدُونَ
எது/அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
(விசாரணையைப் பற்றிப் பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௬௦)
Tafseer