Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரியாத் - Page: 5

Adh-Dhariyat

(aḏ-Ḏāriyāt)

௪௧

وَفِيْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَۚ ٤١

wafī ʿādin
وَفِى عَادٍ
இன்னும் ஆதிலும்
idh arsalnā
إِذْ أَرْسَلْنَا
நாம் அனுப்பியபோது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-rīḥa l-ʿaqīma
ٱلرِّيحَ ٱلْعَقِيمَ
மலட்டுக் காற்றை
"ஆது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) அவர்கள் மீது நாம் நாசகரமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௧)
Tafseer
௪௨

مَا تَذَرُ مِنْ شَيْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِۗ ٤٢

mā tadharu
مَا تَذَرُ
அது விடாது
min shayin
مِن شَىْءٍ
எதையும்
atat
أَتَتْ
செல்கிறதோ
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
illā jaʿalathu
إِلَّا جَعَلَتْهُ
அதை ஆக்காமல்
kal-ramīmi
كَٱلرَّمِيمِ
பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௨)
Tafseer
௪௩

وَفِيْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ ٤٣

wafī thamūda
وَفِى ثَمُودَ
இன்னும் சமூதிலும்
idh qīla
إِذْ قِيلَ
சொல்லப்பட்ட போது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
tamattaʿū
تَمَتَّعُوا۟
சுகமாக இருங்கள் என்று
ḥattā
حَتَّىٰ
வரை
ḥīnin
حِينٍ
சிறிது காலம்
"ஸமூது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) "நீங்கள் ஒரு காலம் வரையில் சுகமாக வாழ்ந்திருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு, ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௩)
Tafseer
௪௪

فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ يَنْظُرُوْنَ ٤٤

faʿataw
فَعَتَوْا۟
பெருமை அடித்தனர்
ʿan amri
عَنْ أَمْرِ
கட்டளையை ஏற்காமல்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்தது
l-ṣāʿiqatu
ٱلصَّٰعِقَةُ
இடிமுழக்கம்
wahum
وَهُمْ
அவர்களோ
yanẓurūna
يَنظُرُونَ
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௪)
Tafseer
௪௫

فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ ٤٥

famā is'taṭāʿū
فَمَا ٱسْتَطَٰعُوا۟
இயலாமல் ஆகிவிட்டார்கள்
min qiyāmin
مِن قِيَامٍ
நிற்பதற்கு
wamā kānū
وَمَا كَانُوا۟
இருக்கவில்லை
muntaṣirīna
مُنتَصِرِينَ
பழிதீர்ப்பவர்களாகவும்
ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்த வாறே அழிந்துவிட்டனர்.) ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௫)
Tafseer
௪௬

وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ ࣖ ٤٦

waqawma
وَقَوْمَ
இன்னும் மக்களையும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
min qablu
مِّن قَبْلُۖ
இதற்கு முன்னர்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
qawman
قَوْمًا
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
பாவிகளான
இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்.) நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௬)
Tafseer
௪௭

وَالسَّمَاۤءَ بَنَيْنٰهَا بِاَيْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ٤٧

wal-samāa
وَٱلسَّمَآءَ
வானத்தை
banaynāhā
بَنَيْنَٰهَا
அதை நாம் உயர்த்தினோம்
bi-aydin
بِأَيْي۟دٍ
பலத்தால்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lamūsiʿūna
لَمُوسِعُونَ
மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
(எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதனை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசால மாக்கியும் வைத்திருக்கின்றோம். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௭)
Tafseer
௪௮

وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمَاهِدُوْنَ ٤٨

wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியை
farashnāhā
فَرَشْنَٰهَا
அதை நாம் விரித்தோம்
faniʿ'ma
فَنِعْمَ
நாம் மிகச் சிறந்தவர்கள்
l-māhidūna
ٱلْمَٰهِدُونَ
விரிப்பவர்களில்
பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர் களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௮)
Tafseer
௪௯

وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٤٩

wamin kulli shayin
وَمِن كُلِّ شَىْءٍ
ஒவ்வொன்றிலும்
khalaqnā
خَلَقْنَا
படைத்தோம்
zawjayni
زَوْجَيْنِ
இரண்டு ஜோடிகளை
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௯)
Tafseer
௫௦

فَفِرُّوْٓا اِلَى اللّٰهِ ۗاِنِّيْ لَكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌۚ ٥٠

fafirrū
فَفِرُّوٓا۟
ஆகவே விரண்டு ஓடுங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُم
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
அவனிடமிருந்து
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
mubīnun
مُّبِينٌ
தெளிவான(வர்)
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫௦)
Tafseer