Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரியாத் - Page: 4

Adh-Dhariyat

(aḏ-Ḏāriyāt)

௩௧

قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَۚ ٣١

qāla
قَالَ
அவர் கூறினார்
famā khaṭbukum
فَمَا خَطْبُكُمْ
உங்கள் காரியம்தான் என்ன?
ayyuhā l-mur'salūna
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
தூதர்களே!
(பின்னர் இப்ராஹீம் மலக்குகளை நோக்கி) "தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)" என்று கேட்டார். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௧)
Tafseer
௩௨

قَالُوْٓ اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ ٣٢

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ur'sil'nā
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டுள்ளோம்
ilā qawmin
إِلَىٰ قَوْمٍ
மக்கள் பக்கம்
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றவாளிகளான
அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றம் செய்யும் (லூத்தின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினர், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௨)
Tafseer
௩௩

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ ٣٣

linur'sila
لِنُرْسِلَ
நாங்கள் எறிவதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥijāratan
حِجَارَةً
கல்லை
min ṭīnin
مِّن طِينٍ
களிமண்ணினால்ஆன
"நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்") ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௩)
Tafseer
௩௪

مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ ٣٤

musawwamatan
مُّسَوَّمَةً
அடையாளமிடப்பட்ட
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
lil'mus'rifīna
لِلْمُسْرِفِينَ
பாவிகளுக்காக
"அது உங்களது இறைவனிடமே வரம்பு மீறியவர்களின் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்ட கற்கள்" (என்றும் கூறினார்கள்.) ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௪)
Tafseer
௩௫

فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَۚ ٣٥

fa-akhrajnā
فَأَخْرَجْنَا
ஆக, நாம் வெளியேற்றி விட்டோம்
man kāna
مَن كَانَ
இருந்தவர்களை
fīhā
فِيهَا
அதில்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௫)
Tafseer
௩௬

فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَۚ ٣٦

famā wajadnā
فَمَا وَجَدْنَا
ஆனால் நாம் காணவில்லை
fīhā
فِيهَا
அதில்
ghayra baytin
غَيْرَ بَيْتٍ
ஒரு வீட்டைத் தவிர
mina l-mus'limīna
مِّنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களுடைய
எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௬)
Tafseer
௩௭

وَتَرَكْنَا فِيْهَآ اٰيَةً لِّلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَۗ ٣٧

wataraknā
وَتَرَكْنَا
நாம் விட்டுள்ளோம்
fīhā
فِيهَآ
அதில்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
lilladhīna yakhāfūna
لِّلَّذِينَ يَخَافُونَ
பயப்படுகின்றவர்களுக்கு
l-ʿadhāba
ٱلْعَذَابَ
தண்டனையை
l-alīma
ٱلْأَلِيمَ
வலி தரக்கூடிய(து)
துன்புறுத்தும் வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௭)
Tafseer
௩௮

وَفِيْ مُوْسٰىٓ اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ ٣٨

wafī mūsā
وَفِى مُوسَىٰٓ
இன்னும் மூஸாவிலும்
idh arsalnāhu
إِذْ أَرْسَلْنَٰهُ
நாம் அவரை அனுப்பிய போது
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கின்றது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௮)
Tafseer
௩௯

فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ٣٩

fatawallā
فَتَوَلَّىٰ
விலகினான்
biruk'nihi
بِرُكْنِهِۦ
தனது பலத்தினால்
waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
sāḥirun
سَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்(தான்)
aw
أَوْ
அல்லது
majnūnun
مَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்(தான்)
அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, "இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௯)
Tafseer
௪௦

فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌۗ ٤٠

fa-akhadhnāhu
فَأَخَذْنَٰهُ
அவனையும் நாம் பிடித்தோம்
wajunūdahu
وَجُنُودَهُۥ
அவனுடைய ராணுவங்களையும்
fanabadhnāhum fī l-yami
فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ
அவர்களை எறிந்தோம்/கடலில்
wahuwa
وَهُوَ
அவனோ
mulīmun
مُلِيمٌ
பழிப்புக்குள்ளானவன்
ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪௦)
Tafseer