Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரியாத் - Page: 3

Adh-Dhariyat

(aḏ-Ḏāriyāt)

௨௧

وَفِيْٓ اَنْفُسِكُمْ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ ٢١

wafī anfusikum
وَفِىٓ أَنفُسِكُمْۚ
இன்னும் உங்களிலும்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா? ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௧)
Tafseer
௨௨

وَفِى السَّمَاۤءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ٢٢

wafī l-samāi
وَفِى ٱلسَّمَآءِ
இன்னும் வானத்தில்
riz'qukum
رِزْقُكُمْ
உங்கள் உணவும்
wamā tūʿadūna
وَمَا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உங்களுடைய உணவு போன்றவை வானத்தில் இருக்கின்றன. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௨)
Tafseer
௨௩

فَوَرَبِّ السَّمَاۤءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَآ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ࣖ ٢٣

fawarabbi
فَوَرَبِّ
அதிபதியின் மீது சத்தியமாக
l-samāi wal-arḍi
ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
வானம், பூமியுடைய
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
laḥaqqun
لَحَقٌّ
உண்மைதான்
mith'la
مِّثْلَ
போன்றே
mā annakum tanṭiqūna
مَآ أَنَّكُمْ تَنطِقُونَ
நிச்சயமாக நீங்கள் பேசுவது
வானம், பூமியின் இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தாம் கூறுகின்றீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப்போல் (இந்தக் குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௩)
Tafseer
௨௪

هَلْ اَتٰىكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَۘ ٢٤

hal atāka
هَلْ أَتَىٰكَ
உமக்கு வந்ததா?
ḥadīthu
حَدِيثُ
செய்தி
ḍayfi
ضَيْفِ
விருந்தினர்களின்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹிமுடைய
l-muk'ramīna
ٱلْمُكْرَمِينَ
கண்ணியமான(வர்கள்)
(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உங்களுக்கு எட்டியிருக்கின்றதா? ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௪)
Tafseer
௨௫

اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا ۗقَالَ سَلٰمٌۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ ٢٥

idh dakhalū
إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
faqālū
فَقَالُوا۟
அவர்கள் கூறினர்
salāman
سَلَٰمًاۖ
ஸலாம்
qāla
قَالَ
கூறினார்
salāmun
سَلَٰمٌ
“ஸலாம்”
qawmun
قَوْمٌ
மக்கள்
munkarūna
مُّنكَرُونَ
அறியாத
அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி "உங்களுக்கு) சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், "உங்களுக்கும்) சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,) ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௫)
Tafseer
௨௬

فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَاۤءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ ٢٦

farāgha
فَرَاغَ
திரும்பிச் சென்றார்
ilā ahlihi
إِلَىٰٓ أَهْلِهِۦ
தனது குடும்பத்தாரிடம்
fajāa
فَجَآءَ
வந்தார்
biʿij'lin samīnin
بِعِجْلٍ سَمِينٍ
கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டு வந்து, ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௬)
Tafseer
௨௭

فَقَرَّبَهٗٓ اِلَيْهِمْۚ قَالَ اَلَا تَأْكُلُوْنَ ٢٧

faqarrabahu
فَقَرَّبَهُۥٓ
அதை நெருக்கமாக்கினார்
ilayhim
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
qāla
قَالَ
கூறினார்
alā takulūna
أَلَا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
அதனை அவர்கள் முன் வைத்தார். (அதனை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௭)
Tafseer
௨௮

فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ۗقَالُوْا لَا تَخَفْۗ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ ٢٨

fa-awjasa
فَأَوْجَسَ
ஆகவே, உணர்ந்தார்
min'hum
مِنْهُمْ
அவர்களினால்
khīfatan
خِيفَةًۖ
பயத்தை
qālū
قَالُوا۟
கூறினார்கள்
lā takhaf
لَا تَخَفْۖ
பயப்படாதீர்
wabasharūhu
وَبَشَّرُوهُ
இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்
bighulāmin
بِغُلَٰمٍ
ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு
ʿalīmin
عَلِيمٍ
கல்வியாளரான
(பின்னும் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர் இவர்களைப் பயந்தார். (இதனை அறிந்த அவர்கள் "இப்ராஹீமே!) நீங்கள் பயப்படாதீர்கள்" என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௮)
Tafseer
௨௯

فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِيْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ ٢٩

fa-aqbalati
فَأَقْبَلَتِ
முன்னோக்கி வந்தால்
im'ra-atuhu
ٱمْرَأَتُهُۥ
அவருடைய மனைவி
fī ṣarratin
فِى صَرَّةٍ
சப்தத்தோடு
faṣakkat
فَصَكَّتْ
இன்னும் அறைந்தார்
wajhahā
وَجْهَهَا
தனது முகத்தை
waqālat
وَقَالَتْ
இன்னும் கூறினாள்
ʿajūzun
عَجُوزٌ
கிழவி ஆயிற்றே
ʿaqīmun
عَقِيمٌ
மலடியான(வள்)
(இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்து கொண்டு "(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)" என்று கூறினார். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௯)
Tafseer
௩௦

قَالُوْا كَذٰلِكِۙ قَالَ رَبُّكِ ۗاِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ ۔ ٣٠

qālū
قَالُوا۟
கூறினார்கள்
kadhāliki
كَذَٰلِكِ
அவ்வாறுதான்
qāla
قَالَ
கூறினான்
rabbuki
رَبُّكِۖ
உமது இறைவன்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
அதற்கவர்கள், "இவ்வாறே உங்களது இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்" என்றார்கள் ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩௦)
Tafseer