Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரியாத் - Page: 2

Adh-Dhariyat

(aḏ-Ḏāriyāt)

௧௧

الَّذِيْنَ هُمْ فِيْ غَمْرَةٍ سَاهُوْنَۙ ١١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
fī ghamratin
فِى غَمْرَةٍ
மயக்கத்தில்
sāhūna
سَاهُونَ
மறதியாளர்களாக
அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்து விட்டனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௧)
Tafseer
௧௨

يَسْـَٔلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِۗ ١٢

yasalūna
يَسْـَٔلُونَ
அவர்கள் கேட்கின்றனர்
ayyāna
أَيَّانَ
எப்போது
yawmu
يَوْمُ
நாள்
l-dīni
ٱلدِّينِ
கூலி கொடுக்கப்படும்
அவர்கள், "கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௨)
Tafseer
௧௩

يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ ١٣

yawma
يَوْمَ
நாளில்...
hum
هُمْ
அவர்கள்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
நெருப்பின் மீது
yuf'tanūna
يُفْتَنُونَ
வேதனை செய்யப்படுகின்றனர்
அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௩)
Tafseer
௧௪

ذُوْقُوْا فِتْنَتَكُمْۗ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ١٤

dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்!
fit'natakum
فِتْنَتَكُمْ
உங்கள் வேதனையை
hādhā alladhī kuntum bihi
هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ
இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
(அவர்களை நோக்கி) "உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்" (என்றும் கூறப்படும்). ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௪)
Tafseer
௧௫

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ ١٥

inna l-mutaqīna
إِنَّ ٱلْمُتَّقِينَ
நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
waʿuyūnin
وَعُيُونٍ
இன்னும் நீரூற்றுகளில்
நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதியிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௫)
Tafseer
௧௬

اٰخِذِيْنَ مَآ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۗ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَۗ ١٦

ākhidhīna
ءَاخِذِينَ
பெற்றுக்கொள்வார்கள்
mā ātāhum
مَآ ءَاتَىٰهُمْ
அவர்களுக்கு கொடுத்ததை
rabbuhum
رَبُّهُمْۚ
அவர்களின் இறைவன்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
qabla dhālika
قَبْلَ ذَٰلِكَ
இதற்கு முன்னர்
muḥ'sinīna
مُحْسِنِينَ
நல்லவர்களாக
அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௬)
Tafseer
௧௭

كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ ١٧

kānū
كَانُوا۟
இருந்தார்கள்
qalīlan
قَلِيلًا
மிகக் குறைவாக
mina al-layli
مِّنَ ٱلَّيْلِ
இரவில்
mā yahjaʿūna
مَا يَهْجَعُونَ
தூங்குபவர்களாக
அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௭)
Tafseer
௧௮

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ ١٨

wabil-asḥāri
وَبِٱلْأَسْحَارِ
அதிகாலையில்
hum yastaghfirūna
هُمْ يَسْتَغْفِرُونَ
அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௮)
Tafseer
௧௯

وَفِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّاۤىِٕلِ وَالْمَحْرُوْمِ ١٩

wafī amwālihim
وَفِىٓ أَمْوَٰلِهِمْ
இன்னும் அவர்களது செல்வங்களில்
ḥaqqun
حَقٌّ
உரிமை
lilssāili
لِّلسَّآئِلِ
யாசிப்பவருக்கு(ம்)
wal-maḥrūmi
وَٱلْمَحْرُومِ
இல்லாதவருக்கும்
அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௯)
Tafseer
௨௦

وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ ٢٠

wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
āyātun
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
lil'mūqinīna
لِّلْمُوقِنِينَ
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
(அனைவருக்கும் தானம் செய்வார்கள்.) உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௦)
Tafseer