Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௫

Qur'an Surah Qaf Verse 45

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍۗ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ يَّخَافُ وَعِيْدِ ࣖ (ق : ٥٠)

naḥnu aʿlamu
نَّحْنُ أَعْلَمُ
We know best
நாம் அதிகம் அறிந்தவர்கள்
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَۖ
[of] what they say
அவர்கள் கூறுகின்றவற்றை
wamā anta
وَمَآ أَنتَ
and not (are) you
நீ இல்லை
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்களை
bijabbārin
بِجَبَّارٍۖ
the one to compel
அடக்கக்கூடியவராக
fadhakkir
فَذَكِّرْ
But remind
ஆகவே, அறிவுரை வழங்குவீராக!
bil-qur'āni
بِٱلْقُرْءَانِ
with the Quran
இந்த குர்ஆன் மூலமாக
man yakhāfu
مَن يَخَافُ
whoever fears
பயப்படுகின்றவருக்கு
waʿīdi
وَعِيدِ
My threat
எனது எச்சரிக்கையை

Transliteration:

Nahnu a'lamu bimaa yaqooloona wa maaa anta 'alihim bijabbaarin fazakkir bil quraani many yakhaafu wa'eed (QS. Q̈āf:45)

English Sahih International:

We are most knowing of what they say, and you are not over them a tyrant. But remind by the Quran whoever fears My threat. (QS. Qaf, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. (நம்முடைய) வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு இந்தக் குர்ஆனைக் கொண்டு நீங்கள் நல்லுபதேசம் செய்வீராக! (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௫)

Jan Trust Foundation

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுகின்றவற்றை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்களை அடக்கக்கூடியவராக (-கட்டாயப்படுத்துபவராக) இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகின்றவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!