Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪

Qur'an Surah Qaf Verse 4

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚوَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ (ق : ٥٠)

qad
قَدْ
Certainly
திட்டமாக
ʿalim'nā
عَلِمْنَا
We know
நாம் அறிவோம்
mā tanquṣu
مَا تَنقُصُ
what diminishes
குறைப்பதை
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
min'hum
مِنْهُمْۖ
of them
அவர்களில்
waʿindanā
وَعِندَنَا
and with Us
நம்மிடம் இருக்கிறது.
kitābun
كِتَٰبٌ
(is) a Book
பதிவு நூல்
ḥafīẓun
حَفِيظٌۢ
guarded
பாதுகாக்கக்கூடிய(து)

Transliteration:

Qad 'alimnaa maa tanqu-sul-ardu minhum wa 'indanaa Kitaabun Hafeez (QS. Q̈āf:4)

English Sahih International:

We know what the earth diminishes [i.e., consumes] of them, and with Us is a retaining record. (QS. Qaf, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பி விடுவோம்.) அன்றி, (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪)

Jan Trust Foundation

(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். நம்மிடம் (நன்கு) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்படுகிறது. அது மிக்க பாதுகாப்பானது.)