குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௯
Qur'an Surah Qaf Verse 39
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ (ق : ٥٠)
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- So be patient
- ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
- ʿalā mā yaqūlūna
- عَلَىٰ مَا يَقُولُونَ
- over what they say
- அவர்கள் பேசுகின்றவற்றின் மீது
- wasabbiḥ
- وَسَبِّحْ
- and glorify
- இன்னும் துதிப்பீராக!
- biḥamdi
- بِحَمْدِ
- (the) praise
- புகழ்ந்து
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனை
- qabla
- قَبْلَ
- before
- முன்னரும்
- ṭulūʿi
- طُلُوعِ
- (the) rising
- உதிப்பதற்கு
- l-shamsi
- ٱلشَّمْسِ
- (of) the sun
- சூரியன்
- waqabla
- وَقَبْلَ
- and before
- முன்னரும்
- l-ghurūbi
- ٱلْغُرُوبِ
- the setting
- மறைவதற்கு
Transliteration:
Fasbir 'alaa maa yaqooloona wa sabbih bihamdi Rabbika qabla tuloo'ish shamsi wa qablal ghuroob(QS. Q̈āf:39)
English Sahih International:
So be patient, [O Muhammad], over what they say and exalt [Allah] with praise of your Lord before the rising of the sun and before its setting, (QS. Qaf, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் (உங்களைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்கள்;) நீங்கள் பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டு இருப்பீராக! (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௯)
Jan Trust Foundation
எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே!) அவர்கள் பேசுகின்றவற்றின் மீது பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும் மறைவதற்கு முன்னரும் உமது இறைவனை புகழ்ந்து துதிப்பீராக!