குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௬
Qur'an Surah Qaf Verse 36
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِى الْبِلَادِۗ هَلْ مِنْ مَّحِيْصٍ (ق : ٥٠)
- wakam
- وَكَمْ
- And how many
- எத்தனையோ
- ahlaknā
- أَهْلَكْنَا
- We destroyed
- நாம் அழித்தோம்
- qablahum
- قَبْلَهُم
- before them
- இவர்களுக்கு முன்னர்
- min qarnin
- مِّن قَرْنٍ
- of a generation
- தலைமுறையினரை
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- ashaddu
- أَشَدُّ
- (were) stronger
- மிக பலமான(வர்கள்)
- min'hum
- مِنْهُم
- than them
- இவர்களை விட
- baṭshan
- بَطْشًا
- (in) power
- வலிமை(யுள்ளவர்கள்)
- fanaqqabū
- فَنَقَّبُوا۟
- so they explored
- அவர்கள் சுற்றினார்கள்
- fī l-bilādi
- فِى ٱلْبِلَٰدِ
- throughout the lands
- நகரங்களில்
- hal min maḥīṣin
- هَلْ مِن مَّحِيصٍ
- Is (there) any place of escape?
- தப்பிக்கும் இடம் ஏதும் இருக்கிறதா?
Transliteration:
Wa kam ahlaknaa qablahum min qarnin hum ashaddu minhum batshan fanaqqaboo fil bilaad, hal mim mahees(QS. Q̈āf:36)
English Sahih International:
And how many a generation before them did We destroy who were greater than them in [striking] power and had explored throughout the lands. Is there any place of escape? (QS. Qaf, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (மாறாக கிடைக்காமல் அழிந்து போயினர்.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௬)
Jan Trust Foundation
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட மிக பலமான விலிமையுள்ளவர்கள். அவர்கள் நகரங்களில் (மூலை முடுக்குகளுக்கெல்லாம்) சுற்றினார்கள். (இருந்தும்) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா?