Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௫

Qur'an Surah Qaf Verse 15

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَعَيِيْنَا بِالْخَلْقِ الْاَوَّلِۗ بَلْ هُمْ فِيْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ ࣖ (ق : ٥٠)

afaʿayīnā
أَفَعَيِينَا
Were We then tired
நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?
bil-khalqi
بِٱلْخَلْقِ
with the creation
படைத்ததினால்
l-awali
ٱلْأَوَّلِۚ
the first?
முதல் முறை
bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
they
அவர்கள் இருக்கின்றனர்
fī labsin
فِى لَبْسٍ
(are) in doubt
குழப்பத்தில்
min khalqin
مِّنْ خَلْقٍ
about a creation
படைக்கப்படுவதில்
jadīdin
جَدِيدٍ
new
புதிதாக

Transliteration:

Afa'a yeenaa bilkhalqil awwal; bal hum fee labsim min khalqin jadeed (QS. Q̈āf:15)

English Sahih International:

Did We fail in the first creation? But they are in confusion over a new creation. (QS. Qaf, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா; (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு) எனினும் இவர்கள். (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௫)

Jan Trust Foundation

எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே). மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதில் குழப்பத்தில் இருக்கின்றனர்.