Skip to content

ஸூரா ஸூரத்து ஃகாஃப் - Page: 5

Qaf

(Q̈āf)

௪௧

وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍ ٤١

wa-is'tamiʿ
وَٱسْتَمِعْ
நீர் செவியுறுவீராக!
yawma
يَوْمَ
நாளில்
yunādi
يُنَادِ
அழைக்கின்ற
l-munādi
ٱلْمُنَادِ
அழைப்பவர்
min makānin
مِن مَّكَانٍ
ஓர் இடத்தில் இருந்து
qarībin
قَرِيبٍ
சமீபமான(து)
(நபியே!) நீங்கள் செவிமடுத்துக் கேளுங்கள். (சமாதிகளின்) சமீபத்திலிருந்து (கொண்டு "மரணித்தவர்களே! எழும்புங்கள்" என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில், ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௧)
Tafseer
௪௨

يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۗذٰلِكَ يَوْمُ الْخُرُوْجِ ٤٢

yawma
يَوْمَ
நாளில்
yasmaʿūna
يَسْمَعُونَ
அவர்கள் செவியுறுகின்ற
l-ṣayḥata
ٱلصَّيْحَةَ
அந்த சப்தத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையில்
dhālika
ذَٰلِكَ
அதுதான்
yawmu
يَوْمُ
நாளாகும்
l-khurūji
ٱلْخُرُوجِ
வெளியேறுகின்ற
(மலக்குகள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௨)
Tafseer
௪௩

اِنَّا نَحْنُ نُحْيٖ وَنُمِيْتُ وَاِلَيْنَا الْمَصِيْرُۙ ٤٣

innā naḥnu
إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
nuḥ'yī
نُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றோம்
wanumītu
وَنُمِيتُ
இன்னும் மரணிக்க வைக்கின்றோம்
wa-ilaynā
وَإِلَيْنَا
இன்னும் நம் பக்கமே இருக்கின்றது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கின்றோம்; நாம்தான் மரணிக்கச் செய்கின்றோம்; நம்மிடமே அனைவரும் வர வேண்டிய திருக்கின்றது. ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௩)
Tafseer
௪௪

يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۗذٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْرٌ ٤٤

yawma
يَوْمَ
நாளில்
tashaqqaqu l-arḍu
تَشَقَّقُ ٱلْأَرْضُ
பூமி பிளந்துவிடும்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
sirāʿan
سِرَاعًاۚ
அதிவிரைவாக வெளியேறுகின்ற
dhālika
ذَٰلِكَ
இது
ḥashrun
حَشْرٌ
ஒன்றுதிரட்டல்தான்
ʿalaynā
عَلَيْنَا
நமக்கு
yasīrun
يَسِيرٌ
இலகுவான
(மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டும் விலகும் நாளையும் (நினைவு கூருங்கள்.) அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே. ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௪)
Tafseer
௪௫

نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍۗ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ يَّخَافُ وَعِيْدِ ࣖ ٤٥

naḥnu aʿlamu
نَّحْنُ أَعْلَمُ
நாம் அதிகம் அறிந்தவர்கள்
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَۖ
அவர்கள் கூறுகின்றவற்றை
wamā anta
وَمَآ أَنتَ
நீ இல்லை
ʿalayhim
عَلَيْهِم
அவர்களை
bijabbārin
بِجَبَّارٍۖ
அடக்கக்கூடியவராக
fadhakkir
فَذَكِّرْ
ஆகவே, அறிவுரை வழங்குவீராக!
bil-qur'āni
بِٱلْقُرْءَانِ
இந்த குர்ஆன் மூலமாக
man yakhāfu
مَن يَخَافُ
பயப்படுகின்றவருக்கு
waʿīdi
وَعِيدِ
எனது எச்சரிக்கையை
(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. (நம்முடைய) வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு இந்தக் குர்ஆனைக் கொண்டு நீங்கள் நல்லுபதேசம் செய்வீராக! ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪௫)
Tafseer