Skip to content

ஸூரா ஸூரத்து ஃகாஃப் - Page: 3

Qaf

(Q̈āf)

௨௧

وَجَاۤءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَاۤىِٕقٌ وَّشَهِيْدٌ ٢١

wajāat
وَجَآءَتْ
வரும்
kullu
كُلُّ
எல்லா
nafsin
نَفْسٍ
ஆன்மாவும்
maʿahā
مَّعَهَا
அதனுடன் இருக்கின்ற நிலையில்
sāiqun
سَآئِقٌ
ஓட்டிவருபவரும்
washahīdun
وَشَهِيدٌ
சாட்சி சொல்பவரும்
(அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௧)
Tafseer
௨௨

لَقَدْ كُنْتَ فِيْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاۤءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ ٢٢

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
kunta
كُنتَ
நீ இருந்தாய்
fī ghaflatin
فِى غَفْلَةٍ
மறந்த நிலையில்
min hādhā
مِّنْ هَٰذَا
இதை
fakashafnā
فَكَشَفْنَا
நாம் அகற்றினோம்
ʿanka
عَنكَ
உன்னை விட்டும்
ghiṭāaka
غِطَآءَكَ
உனது திரையை
fabaṣaruka
فَبَصَرُكَ
ஆகவே, உனது பார்வை
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
ḥadīdun
حَدِيدٌ
மிகக் கூர்மையானதாக
அவனை நோக்கி "நிச்சயமாக நீ இதனைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னைவிட்டும் நாம் நீக்கிவிட்டோம். இன்றைய தினம் உன்னுடைய பார்வை கூர்மையாயிருக்கின்றது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்த இதனை உன் கண்ணைத் திறந்து பார்" என்று கூறப்படும்.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௨)
Tafseer
௨௩

وَقَالَ قَرِيْنُهٗ هٰذَا مَا لَدَيَّ عَتِيْدٌۗ ٢٣

waqāla
وَقَالَ
கூறுவார்
qarīnuhu
قَرِينُهُۥ
அவனுடைய நண்பன்
hādhā mā ladayya
هَٰذَا مَا لَدَىَّ
இது/எது/என்னிடம்
ʿatīdun
عَتِيدٌ
தயாராக
(சாட்சி கூற) அவனுடன் வந்தவர் "இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராகி) இருக்கின்றது" என்று கூறுவார். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௩)
Tafseer
௨௪

اَلْقِيَا فِيْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيْدٍ ٢٤

alqiyā
أَلْقِيَا
நீங்கள் இருவரும் தள்ளுங்கள்!
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகத்தில்
kulla
كُلَّ
எல்லோரையும்
kaffārin
كَفَّارٍ
நிராகரிப்பாளர்
ʿanīdin
عَنِيدٍ
முரண்டு பிடிப்பவர்
(உடனே இரு காவலர்களை நோக்கி) "நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தான் முதலிய) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்" (என்று கூறப்படும்). ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௪)
Tafseer
௨௫

مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيْبٍۙ ٢٥

mannāʿin lil'khayri
مَّنَّاعٍ لِّلْخَيْرِ
தடுப்பவர்/செல்வத்தை
muʿ'tadin
مُعْتَدٍ
எல்லை மீறுபவர்
murībin
مُّرِيبٍ
சந்தேகிப்பவன்
("அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக் கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக் கொண்டுமிருந்தான்" என்றும், ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௫)
Tafseer
௨௬

ۨالَّذِيْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِيٰهُ فِى الْعَذَابِ الشَّدِيْدِ ٢٦

alladhī
ٱلَّذِى
எவர்
jaʿala
جَعَلَ
ஏற்படுத்தினாரோ
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan ākhara
إِلَٰهًا ءَاخَرَ
வேறு ஒரு கடவுளை
fa-alqiyāhu
فَأَلْقِيَاهُ
அவரையும் தள்ளுங்கள்!
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
l-shadīdi
ٱلشَّدِيدِ
கடுமையான(து)
"இவன் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்" (என்றும் கூறப்படும்). ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௬)
Tafseer
௨௭

۞ قَالَ قَرِيْنُهٗ رَبَّنَا مَآ اَطْغَيْتُهٗ وَلٰكِنْ كَانَ فِيْ ضَلٰلٍۢ بَعِيْدٍ ٢٧

qāla
قَالَ
கூறுவான்
qarīnuhu
قَرِينُهُۥ
அவனுடைய நண்பன்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
mā aṭghaytuhu
مَآ أَطْغَيْتُهُۥ
நான் அவனை மீறச்செய்யவில்லை
walākin
وَلَٰكِن
எனினும்
kāna
كَانَ
இருந்தான்
fī ḍalālin
فِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்
baʿīdin
بَعِيدٍ
தூரமான(து)
(அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்" என்று கூறுவான். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௭)
Tafseer
௨௮

قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ اِلَيْكُمْ بِالْوَعِيْدِ ٢٨

qāla
قَالَ
கூறுவான்
lā takhtaṣimū
لَا تَخْتَصِمُوا۟
தர்க்கம் செய்யாதீர்கள்
ladayya
لَدَىَّ
என்னிடம்
waqad
وَقَدْ
திட்டமாக
qaddamtu
قَدَّمْتُ
முற்படுத்திவிட்டேன்
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
bil-waʿīdi
بِٱلْوَعِيدِ
எச்சரிக்கையை
(ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) "என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்" என்றும், ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௮)
Tafseer
௨௯

مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَآ اَنَا۠ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ ࣖ ٢٩

mā yubaddalu
مَا يُبَدَّلُ
மாற்றப்படாது
l-qawlu
ٱلْقَوْلُ
பேச்சுகள்
ladayya
لَدَىَّ
என்னிடம்
wamā anā
وَمَآ أَنَا۠
நான் இல்லை
biẓallāmin
بِظَلَّٰمٍ
அறவே அநியாயம் செய்பவனாக
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு
"என்னுடைய கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என்னுடைய அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல" என்றும் கூறுவான். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௯)
Tafseer
௩௦

يَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَـْٔتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ ٣٠

yawma
يَوْمَ
நாளில்
naqūlu
نَقُولُ
நாம் கூறுகின்ற
lijahannama
لِجَهَنَّمَ
நரகத்திடம்
hali im'talati
هَلِ ٱمْتَلَأْتِ
நீ நிரம்பிவிட்டாயா?
wataqūlu
وَتَقُولُ
அது கூறும்
hal min mazīdin
هَلْ مِن مَّزِيدٍ
இன்னும் அதிகம் இருக்கிறதா?
தவிர அந்நாளில் நரகத்தை நோக்கி, "உன்னுடைய வயிறு நிறைந்து விட்டதா?" என்று நாம் கேட்போம். அதற்கு அது "இன்னும் ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩௦)
Tafseer