Skip to content

ஸூரா ஸூரத்து ஃகாஃப் - Page: 2

Qaf

(Q̈āf)

௧௧

رِّزْقًا لِّلْعِبَادِۙ وَاَحْيَيْنَا بِهٖ بَلْدَةً مَّيْتًاۗ كَذٰلِكَ الْخُرُوْجُ ١١

riz'qan
رِّزْقًا
உணவாக இருப்பதற்காக
lil'ʿibādi
لِّلْعِبَادِۖ
அடியார்களுக்கு
wa-aḥyaynā
وَأَحْيَيْنَا
நாம் உயிர்ப்பிப்போம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
baldatan
بَلْدَةً
பூமியை
maytan
مَّيْتًاۚ
இறந்த(து)
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
l-khurūju
ٱلْخُرُوجُ
வெளியேறுவதும்
அதனை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவைகளைக் கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௧)
Tafseer
௧௨

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ١٢

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
மக்களும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
wa-aṣḥābu l-rasi
وَأَصْحَٰبُ ٱلرَّسِّ
கிணற்றுடையவர்களும்
wathamūdu
وَثَمُودُ
ஸமூது மக்களும்
(இவைகளையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு(அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் (பொய்யாக்கினர்.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௨)
Tafseer
௧௩

وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ ١٣

waʿādun
وَعَادٌ
ஆது மக்களும்
wafir'ʿawnu
وَفِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
wa-ikh'wānu
وَإِخْوَٰنُ
சகோதரர்களும்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்). ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௩)
Tafseer
௧௪

وَّاَصْحٰبُ الْاَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍۗ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيْدِ ١٤

wa-aṣḥābu l-aykati
وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ
தோட்டக்காரர்களும்
waqawmu
وَقَوْمُ
மக்களும்
tubbaʿin
تُبَّعٍۚ
துப்பஃ உடைய
kullun
كُلٌّ
எல்லோரும்
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
l-rusula
ٱلرُّسُلَ
தூதர்களை
faḥaqqa
فَحَقَّ
ஆகவே, உறுதியாகிவிட்டது
waʿīdi
وَعِيدِ
என் எச்சரிக்கை
அன்றி, தோப்பில் வசித்தவர்களும், "துப்பஉ" என்னும் மக்களும் ஆகிய இவர்கள் ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழித்து விடுவோமென்ற) நம்முடைய வாக்கு பூர்த்தியாயிற்று. ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௪)
Tafseer
௧௫

اَفَعَيِيْنَا بِالْخَلْقِ الْاَوَّلِۗ بَلْ هُمْ فِيْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ ࣖ ١٥

afaʿayīnā
أَفَعَيِينَا
நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?
bil-khalqi
بِٱلْخَلْقِ
படைத்ததினால்
l-awali
ٱلْأَوَّلِۚ
முதல் முறை
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள் இருக்கின்றனர்
fī labsin
فِى لَبْسٍ
குழப்பத்தில்
min khalqin
مِّنْ خَلْقٍ
படைக்கப்படுவதில்
jadīdin
جَدِيدٍ
புதிதாக
(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா; (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு) எனினும் இவர்கள். (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௫)
Tafseer
௧௬

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖوَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ ١٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
wanaʿlamu
وَنَعْلَمُ
இன்னும் நாம் அறிவோம்
mā tuwaswisu
مَا تُوَسْوِسُ
எதை/கிசுகிசுக்கிறதோ
bihi
بِهِۦ
அதை
nafsuhu
نَفْسُهُۥۖ
அவனது உள்ளம்
wanaḥnu
وَنَحْنُ
நாம்
aqrabu
أَقْرَبُ
மிக நெருக்கமானவர்கள்
ilayhi
إِلَيْهِ
அவனுக்கு
min ḥabli
مِنْ حَبْلِ
நரம்பைவிட
l-warīdi
ٱلْوَرِيدِ
கழுத்தின்
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௬)
Tafseer
௧௭

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ ١٧

idh yatalaqqā
إِذْ يَتَلَقَّى
சந்திக்கின்ற போது
l-mutalaqiyāni
ٱلْمُتَلَقِّيَانِ
சந்திக்கின்ற இரு வானவர்கள்
ʿani l-yamīni
عَنِ ٱلْيَمِينِ
வலது பக்கத்திலும்
waʿani l-shimāli
وَعَنِ ٱلشِّمَالِ
இடது பக்கத்திலும்
qaʿīdun
قَعِيدٌ
கண்காணிப்பவர்
வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௭)
Tafseer
௧௮

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ ١٨

mā yalfiẓu
مَّا يَلْفِظُ
பேச மாட்டான்
min qawlin
مِن قَوْلٍ
பேச்சில் எதையும்
illā
إِلَّا
தவிர
ladayhi
لَدَيْهِ
அவனிடம் இருந்தே
raqībun
رَقِيبٌ
கண்காணிப்பாளர்
ʿatīdun
عَتِيدٌ
ஆஜராகி இருப்பவர்
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௮)
Tafseer
௧௯

وَجَاۤءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۗذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ ١٩

wajāat
وَجَآءَتْ
வந்துவிட்டது
sakratu
سَكْرَةُ
மயக்கம்
l-mawti
ٱلْمَوْتِ
மரணத்தின்
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையாக
dhālika
ذَٰلِكَ
அதுதான்
mā kunta
مَا كُنتَ
எது/நீ இருந்தாய்
min'hu
مِنْهُ
அதை விட்டு
taḥīdu
تَحِيدُ
விலகி ஓடுபவனாக
மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்துவிடும் பட்சத்தில் (அவனை நோக்கி) "நீ தப்பிவிடக் கருதியது இதுதான்" (என்று கூறப்படும்.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௯)
Tafseer
௨௦

وَنُفِخَ فِى الصُّوْرِۗ ذٰلِكَ يَوْمُ الْوَعِيْدِ ٢٠

wanufikha
وَنُفِخَ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِۚ
சூரில்
dhālika yawmu
ذَٰلِكَ يَوْمُ
அதுதான்/நாள்
l-waʿīdi
ٱلْوَعِيدِ
எச்சரிக்கப்பட்ட
எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி "உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)" என்று கூறப்படும். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨௦)
Tafseer