Skip to content

ஸூரா ஸூரத்து ஃகாஃப் - Word by Word

Qaf

(Q̈āf)

bismillaahirrahmaanirrahiim

قۤ ۗوَالْقُرْاٰنِ الْمَجِيْدِ ۖ ١

qaf
قٓۚ
காஃப்
wal-qur'āni
وَٱلْقُرْءَانِ
குர்ஆன் மீது சத்தியமாக!
l-majīdi
ٱلْمَجِيدِ
கீர்த்திமிக்க(து)
காஃப். (நபியே!) மிக்க மேலான இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக! ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧)
Tafseer

بَلْ عَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَيْءٌ عَجِيْبٌ ۚ ٢

bal
بَلْ
மாறாக
ʿajibū
عَجِبُوٓا۟
ஆச்சரியப்பட்டனர்
an
أَن
வந்ததால்
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
mundhirun
مُّنذِرٌ
ஓர் எச்சரிப்பாளர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில் இருந்தே
faqāla
فَقَالَ
ஆகவே, கூறினர்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
hādhā
هَٰذَا
இது
shayon
شَىْءٌ
ஒரு விஷயம்
ʿajībun
عَجِيبٌ
மிக ஆச்சரியமான
(நீங்கள் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்). ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதராக (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் இருந்தே நீங்கள் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, நிராகரிப்பவர்கள் "இது மிக அற்புதமான விஷயமென்று" கூறுகின்றனர். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௨)
Tafseer

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰلِكَ رَجْعٌۢ بَعِيْدٌ ٣

a-idhā mit'nā
أَءِذَا مِتْنَا
நாங்கள் இறந்துவிட்டாலுமா
wakunnā
وَكُنَّا
இன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமா
turāban
تُرَابًاۖ
மண்ணாக
dhālika
ذَٰلِكَ
அது
rajʿun
رَجْعٌۢ
மீட்சியாகும்
baʿīdun
بَعِيدٌ
தூரமான(து)
(அன்றி, "இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீள வைக்கப் படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை" என்றும் கூறுகின்றனர்.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௩)
Tafseer

قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚوَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ ٤

qad
قَدْ
திட்டமாக
ʿalim'nā
عَلِمْنَا
நாம் அறிவோம்
mā tanquṣu
مَا تَنقُصُ
குறைப்பதை
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
min'hum
مِنْهُمْۖ
அவர்களில்
waʿindanā
وَعِندَنَا
நம்மிடம் இருக்கிறது.
kitābun
كِتَٰبٌ
பதிவு நூல்
ḥafīẓun
حَفِيظٌۢ
பாதுகாக்கக்கூடிய(து)
(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பி விடுவோம்.) அன்றி, (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௪)
Tafseer

بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَاۤءَهُمْ فَهُمْ فِيْٓ اَمْرٍ مَّرِيْجٍ ٥

bal
بَلْ
மாறாக
kadhabū
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையை
lammā
لَمَّا
அது வந்த போது
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
fahum
فَهُمْ
அவர்கள் இருக்கின்றனர்
fī amrin
فِىٓ أَمْرٍ
ஒரு விஷயத்தில்
marījin
مَّرِيجٍ
குழப்பமான
இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௫)
Tafseer

اَفَلَمْ يَنْظُرُوْٓا اِلَى السَّمَاۤءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَيَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ٦

afalam yanẓurū
أَفَلَمْ يَنظُرُوٓا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-samāi
إِلَى ٱلسَّمَآءِ
வானத்தை
fawqahum
فَوْقَهُمْ
தங்களுக்கு மேல் உள்ள
kayfa banaynāhā
كَيْفَ بَنَيْنَٰهَا
நாம் அதை எப்படி படைத்தோம்?
wazayyannāhā
وَزَيَّنَّٰهَا
இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?
wamā lahā
وَمَا لَهَا
அதில் இல்லை
min furūjin
مِن فُرُوجٍ
பிளவுகள்
தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதனை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதனை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம். அதில் எவ்வித வெடிப்புமில்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!) ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௬)
Tafseer

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍۙ ٧

wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
madadnāhā
مَدَدْنَٰهَا
நாம் அதை விரித்தோம்
wa-alqaynā fīhā
وَأَلْقَيْنَا فِيهَا
இன்னும் அதில் அமைத்தோம்
rawāsiya
رَوَٰسِىَ
பெரிய மலைகளை
wa-anbatnā
وَأَنۢبَتْنَا
இன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
அதில்
min kulli zawjin
مِن كُلِّ زَوْجٍۭ
எல்லா வகையான
bahījin
بَهِيجٍ
அழகான
அன்றி, நாமே பூமியை விரித்து, அதில் ஸ்திரமான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௭)
Tafseer

تَبْصِرَةً وَّذِكْرٰى لِكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ ٨

tabṣiratan
تَبْصِرَةً
உற்று நோக்குவதற்காக(வும்)
wadhik'rā
وَذِكْرَىٰ
படிப்பினை பெறுவதற்காகவும்
likulli ʿabdin
لِكُلِّ عَبْدٍ
எல்லா அடியார்களுக்கும்
munībin
مُّنِيبٍ
திரும்பக்கூடிய(வர்)
(இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கின்றது). ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௮)
Tafseer

وَنَزَّلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِۙ ٩

wanazzalnā
وَنَزَّلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
நீரை
mubārakan
مُّبَٰرَكًا
அருள் நிறைந்த(து)
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
jannātin
جَنَّٰتٍ
தோட்டங்களை(யும்)
waḥabba
وَحَبَّ
தானியங்களையும்
l-ḥaṣīdi
ٱلْحَصِيدِ
அறுவடை செய்யப்படும்
மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதனைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கின்றோம். ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௯)
Tafseer
௧௦

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِيْدٌۙ ١٠

wal-nakhla
وَٱلنَّخْلَ
இன்னும் பேரித்த மரங்களையும்
bāsiqātin
بَاسِقَٰتٍ
உயரமான(வைகள்)
lahā
لَّهَا
அவற்றில்
ṭalʿun
طَلْعٌ
குலைகள் இருக்கின்றன
naḍīdun
نَّضِيدٌ
அடர்த்தியான(து)
அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து), ([௫௦] ஸூரத்து ஃகாஃப்: ௧௦)
Tafseer