குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௪
Qur'an Surah Al-Ma'idah Verse 94
ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَيْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُهٗٓ اَيْدِيْكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْغَيْبِۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ (المائدة : ٥)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- layabluwannakumu
- لَيَبْلُوَنَّكُمُ
- Surely will test you
- நிச்சயமாக சோதிப்பான் / உங்களை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bishayin
- بِشَىْءٍ
- through something
- சிலதைக் கொண்டு
- mina l-ṣaydi
- مِّنَ ٱلصَّيْدِ
- of the game
- வேட்டைகளில்
- tanāluhu
- تَنَالُهُۥٓ
- can reach it
- அடைந்து விடுகின்றன/அதை
- aydīkum
- أَيْدِيكُمْ
- your hands
- உங்கள் கரங்கள்
- warimāḥukum
- وَرِمَاحُكُمْ
- and your spears
- இன்னும் ஈட்டிகள்/உங்கள்
- liyaʿlama
- لِيَعْلَمَ
- that may make evident
- அறிவதற்காக
- l-lahu man
- ٱللَّهُ مَن
- Allah who
- அல்லாஹ்/எவர்
- yakhāfuhu
- يَخَافُهُۥ
- fears Him
- பயப்படுகிறார்/தன்னை
- bil-ghaybi
- بِٱلْغَيْبِۚ
- in the unseen
- மறைவில்
- famani iʿ'tadā
- فَمَنِ ٱعْتَدَىٰ
- And whoever transgressed
- எவர்/மீறினார்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- after that
- இதற்குப் பின்பு
- falahu
- فَلَهُۥ
- then for him
- அவருக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- துன்புறுத்தக்கூடியது
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanoo la yabluwannnakumul laahu bishai'im minas saidi tanaaluhooo aideekum wa rimaahukum liya'lamal laahu mai yakhaafuhoo bilghaib; famani' tadaa ba'da zaalika falahoo 'azaabun aleem(QS. al-Māʾidah:94)
English Sahih International:
O you who have believed, Allah will surely test you through something of the game that your hands and spears [can] reach, that Allah may make evident those who fear Him unseen. And whoever transgresses after that – for him is a painful punishment. (QS. Al-Ma'idah, Ayah ௯௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்களுடைய கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய யாதொரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௪)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை பயப்படுபவரை அல்லாஹ் அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.