Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௩

Qur'an Surah Al-Ma'idah Verse 93

ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْٓا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ۗوَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ (المائدة : ٥)

laysa
لَيْسَ
Not
இல்லை
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
on those who
மீது/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
the good deeds
நன்மைகளை
junāḥun
جُنَاحٌ
any sin
குற்றம்
fīmā
فِيمَا
for what
எதில்
ṭaʿimū
طَعِمُوٓا۟
they ate
புசித்தார்கள்
idhā mā ittaqaw
إِذَا مَا ٱتَّقَوا۟
when that they fear (Allah)
தவிர்ந்து கொண்டால்
waāmanū
وَّءَامَنُوا۟
and they believe
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and they do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
[the] good deeds
நன்மைகளை
thumma
ثُمَّ
then
பிறகு
ittaqaw
ٱتَّقَوا۟
they fear (Allah)
அஞ்சினார்கள்
waāmanū
وَّءَامَنُوا۟
and believe
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
thumma
ثُمَّ
then
பிறகு
ittaqaw
ٱتَّقَوا۟
they fear (Allah)
அஞ்சினார்கள்
wa-aḥsanū
وَّأَحْسَنُوا۟ۗ
and do good
இன்னும் நல்லறம் செய்தார்கள்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம்புரிவோரை

Transliteration:

Laisa 'alal lazeena aamanoo wa 'amilus saalihaati junaahun feemaa ta'imooo izaa mat taqaw wa aamanoo wa 'amilus saalihaati summat taqaw wa aamanoo summat taqaw wa ahsanoo; wallaahu yuhibbul muhsineen (QS. al-Māʾidah:93)

English Sahih International:

There is not upon those who believe and do righteousness [any] blame concerning what they have eaten [in the past] if they [now] fear Allah and believe and do righteous deeds, and then fear Allah and believe, and then fear Allah and do good; and Allah loves the doers of good. (QS. Al-Ma'idah, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது. அவர்கள் (தடுக்கப்பட்டபின் அவைகளிலிருந்து) விலகி நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௩)

Jan Trust Foundation

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை. (தடுக்கப்பட்ட உணவை தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, (பிறருக்கும்) நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.