Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௮

Qur'an Surah Al-Ma'idah Verse 88

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا ۖوَّاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ (المائدة : ٥)

wakulū
وَكُلُوا۟
And eat
இன்னும் புசியுங்கள்
mimmā
مِمَّا
of what
எதிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
has provided you
வழங்கினான்/ உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ḥalālan
حَلَٰلًا
lawful
அனுமதிக்கப்பட்டதை
ṭayyiban
طَيِّبًاۚ
good
நல்லது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
alladhī
ٱلَّذِىٓ
the One
எவன்
antum bihi
أَنتُم بِهِۦ
you (are) in Him
நீங்கள்/அவனை
mu'minūna
مُؤْمِنُونَ
believers
நம்பிக்கை கொள்கிறீர்கள்

Transliteration:

Wa kuloo mimmaa razaqakumul laahu halaalan taiyibaa; wattaqul laahallazeee antum bihee mu'minon (QS. al-Māʾidah:88)

English Sahih International:

And eat of what Allah has provided for you [which is] lawful and good. And fear Allah, in whom you are believers. (QS. Al-Ma'idah, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௮)

Jan Trust Foundation

அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வை அஞ்சுங்கள்.