Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௭

Qur'an Surah Al-Ma'idah Verse 87

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَآ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
lā tuḥarrimū
لَا تُحَرِّمُوا۟
(Do) not make unlawful
ஆகாதவையாக ஆக்காதீர்கள்
ṭayyibāti
طَيِّبَٰتِ
(the) good things
நல்லவற்றை
mā aḥalla
مَآ أَحَلَّ
(of) what has (been) made lawful
எவை/ ஆகுமாக்கினான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
walā taʿtadū
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
and (do) not transgress
இன்னும் வரம்புமீறாதீர்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
the transgressors
வரம்புமீறிகளை

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa tuharrimoo taiyibaati maaa ahallal laahu lakum wa laa ta'tadooo; innal laaha laa yuhibbul mu'tadeen (QS. al-Māʾidah:87)

English Sahih International:

O you who have believed, do not prohibit the good things which Allah has made lawful to you and do not transgress. Indeed, Allah does not like transgressors. (QS. Al-Ma'idah, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவைகளை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௭)

Jan Trust Foundation

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கிய நல்லவற்றை ஆகாதவையாக (ஹரமாக) ஆக்காதீர்கள்; வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்புமீறிகளை நேசிக்கமாட்டான்.