Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௪

Qur'an Surah Al-Ma'idah Verse 84

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَاۤءَنَا مِنَ الْحَقِّۙ وَنَطْمَعُ اَنْ يُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِيْنَ (المائدة : ٥)

wamā lanā
وَمَا لَنَا
And what for us (that)
என்ன/எங்களுக்கு
lā nu'minu
لَا نُؤْمِنُ
not we believe
நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wamā
وَمَا
and what
இன்னும் எது
jāanā
جَآءَنَا
came (to) us
வந்தது நமக்கு
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّ
from the truth?
சத்தியம்
wanaṭmaʿu
وَنَطْمَعُ
And we hope
நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்
an yud'khilanā
أَن يُدْخِلَنَا
that will admit us
எங்களை/அவன் சேர்ப்பதை
rabbunā
رَبُّنَا
our Lord
எங்கள் இறைவன்
maʿa
مَعَ
with
உடன்
l-qawmi
ٱلْقَوْمِ
the people"
மக்கள்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
the righteous"
நல்லவர்கள்

Transliteration:

Wa maa lanaa laa nu'minu billaahi wa maa jaaa'anaa minal haqqi wa natma'u ai yudkhilanaa Rabbunaa ma'al qawmis saaliheen (QS. al-Māʾidah:84)

English Sahih International:

And why should we not believe in Allah and what has come to us of the truth? And we aspire that our Lord will admit us [to Paradise] with the righteous people." (QS. Al-Ma'idah, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

"அன்றி, அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்" என்றும் (கூறுகின்றனர்.) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௪)

Jan Trust Foundation

மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்தியத்தையும் நாங்கள் நம்பிக்கைகொள்ளாதிருக்கவும், எங்களையும் எங்கள் இறைவன் நல்ல மக்களுடன் சேர்ப்பதை நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும் எங்களுக்கு என்ன நேர்ந்தது?" (என்று கூறுகின்றனர்).