குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௨
Qur'an Surah Al-Ma'idah Verse 82
ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْاۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْٓا اِنَّا نَصٰرٰىۗ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ۔ (المائدة : ٥)
- latajidanna
- لَتَجِدَنَّ
- Surely you will find
- (நீர்) காண்பீர்
- ashadda
- أَشَدَّ
- strongest
- கடுமையானவர்களாக
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the people
- மக்களில்
- ʿadāwatan
- عَدَٰوَةً
- (in) enmity
- பகைமையினால்
- lilladhīna
- لِّلَّذِينَ
- to those who
- எவர்களுக்கு
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டார்கள்
- l-yahūda
- ٱلْيَهُودَ
- the Jews
- யூதர்களை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்களை
- ashrakū
- أَشْرَكُوا۟ۖ
- (are) polytheists;
- இணைவைத்தனர்
- walatajidanna
- وَلَتَجِدَنَّ
- and surely you will find
- இன்னும் நிச்சயமாக காண்பீர்
- aqrabahum
- أَقْرَبَهُم
- nearest of them
- அவர்களில் மிக நெருங்கியவர்களாக
- mawaddatan
- مَّوَدَّةً
- (in) affection
- நேசத்தில்
- lilladhīna āmanū
- لِّلَّذِينَ ءَامَنُوا۟
- to those who believe
- நம்பிக்கையாளர்களுக்கு
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களை
- qālū
- قَالُوٓا۟
- say
- கூறினார்கள்
- innā
- إِنَّا
- "We
- நிச்சயமாக நாங்கள்
- naṣārā
- نَصَٰرَىٰۚ
- (are) Christians"
- கிறித்தவர்கள்
- dhālika
- ذَٰلِكَ
- That (is)
- அது
- bi-anna
- بِأَنَّ
- because
- காரணம்/நிச்சயமாக
- min'hum
- مِنْهُمْ
- among them
- அவர்களில்
- qissīsīna
- قِسِّيسِينَ
- (are) priests
- குருக்கள்
- waruh'bānan
- وَرُهْبَانًا
- and monks
- இன்னும் துறவிகள்
- wa-annahum
- وَأَنَّهُمْ
- and that they
- நிச்சயமாக அவர்கள்
- lā yastakbirūna
- لَا يَسْتَكْبِرُونَ
- (are) not arrogant
- பெருமை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Latajidanna ashad dan naasi 'adaawatal lillazeena aamanul Yahooda wallazeena ashrakoo wa latajidanna aqrabahum mawaddatal lil lazeena aamanul lazeena qaalooo innaa Nasaaraa; zaalika bi anna mminhum qiseeseena wa ruhbaananw wa annahum laa yastakbiroon(QS. al-Māʾidah:82)
English Sahih International:
You will surely find the most intense of the people in animosity toward the believers [to be] the Jews and those who associate others with Allah; and you will find the nearest of them in affection to the believers those who say, "We are Christians." That is because among them are priests and monks and because they are not arrogant. (QS. Al-Ma'idah, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். அன்றி, அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௨)
Jan Trust Foundation
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு பகைமையில் கடுமையானவர்களாக காண்பீர்! நிச்சயமாக நீர் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்களை நேசத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் மிக நெருங்கியவர்களாகக் காண்பீர்! நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளுமாக இருப்பதும், நிச்சயமாக அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள் என்பதும்தான் அதற்குக் காரணம்.