Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௭

Qur'an Surah Al-Ma'idah Verse 77

ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِيْ دِيْنِكُمْ غَيْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْٓا اَهْوَاۤءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَاۤءِ السَّبِيْلِ ࣖ (المائدة : ٥)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
"O People (of) the Book!
வேதக்காரர்களே
lā taghlū
لَا تَغْلُوا۟
(Do) not exceed
வரம்பு மீறாதீர்கள்
fī dīnikum
فِى دِينِكُمْ
in your religion
மார்க்கத்தில்/உங்கள்
ghayra
غَيْرَ
other than
முரணாக
l-ḥaqi
ٱلْحَقِّ
the truth
உண்மைக்கு
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوٓا۟
and (do) not follow
இன்னும் பின்பற்றாதீர்கள்
ahwāa
أَهْوَآءَ
(vain) desires
விருப்பங்களை
qawmin
قَوْمٍ
(of) a people
சமுதாயத்தின்
qad ḍallū
قَدْ ضَلُّوا۟
certainly who went astray
வழிதவறி விட்டனர்
min qablu
مِن قَبْلُ
from before
முன்பு
wa-aḍallū
وَأَضَلُّوا۟
and they misled
இன்னும் வழி கெடுத்தனர்
kathīran
كَثِيرًا
many
பலரை
waḍallū
وَضَلُّوا۟
and they have strayed
இன்னும் வழி தவறினர்
ʿan sawāi
عَن سَوَآءِ
from (the) right
இருந்து/நேரான
l-sabīli
ٱلسَّبِيلِ
[the] way
பாதை

Transliteration:

Qul yaaa Ahlal Kitaabi laa taghloo fee deenikum ghairal haqqi wa laa tattabi'ooo ahwaaa'a qawmin qad dalloo min qablu wa adalloo kaseeranw wa dalloo 'an Sawaaa'is Sabeel (QS. al-Māʾidah:77)

English Sahih International:

Say, "O People of the Scripture, do not exceed limits in your religion beyond the truth and do not follow the inclinations of a people who had gone astray before and misled many and have strayed from the soundness of the way." (QS. Al-Ma'idah, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

"வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். அன்றி, இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௭)

Jan Trust Foundation

“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்." என்று (நபியே!) கூறுவீராக.