குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௧
Qur'an Surah Al-Ma'idah Verse 71
ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَحَسِبُوْٓا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ (المائدة : ٥)
- waḥasibū
- وَحَسِبُوٓا۟
- And they thought
- இன்னும் எண்ணினர்
- allā takūna
- أَلَّا تَكُونَ
- that not will be (for them)
- ஏற்படாது
- fit'natun
- فِتْنَةٌ
- a trial
- தண்டனை
- faʿamū
- فَعَمُوا۟
- so they became blind
- ஆகவே குருடாகினர்
- waṣammū
- وَصَمُّوا۟
- and they became deaf
- இன்னும் செவிடாகினர்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- tāba
- تَابَ
- turned
- பிழைபொறுத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- thumma ʿamū
- ثُمَّ عَمُوا۟
- then (again) they became blind
- பிறகும்/குருடாகினர்
- waṣammū
- وَصَمُّوا۟
- and they became deaf
- இன்னும் செவிடாகினர்
- kathīrun
- كَثِيرٌ
- many
- அதிகமானோர்
- min'hum
- مِّنْهُمْۚ
- of them
- அவர்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- (is) All-Seer
- உற்று நோக்குபவன்
- bimā yaʿmalūna
- بِمَا يَعْمَلُونَ
- of what they do
- எதை/செய்கிறார்கள்
Transliteration:
Wa hasibooo allaa takoona fitnaun fa'amoo wa sammoo summa taabal laahu 'alaihim summa 'amoo wa sammoo kaseerum minhum; wallaahu baseerum bimaa ya'maloon(QS. al-Māʾidah:71)
English Sahih International:
And they thought there would be no [resulting] punishment, so they became blind and deaf. Then Allah turned to them in forgiveness; then [again] many of them became blind and deaf. And Allah is Seeing of what they do. (QS. Al-Ma'idah, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
(இதனால் தங்களுக்கு) யாதொரு ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதனைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௧)
Jan Trust Foundation
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தண்டனை ஏற்படாது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுத்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.