குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௯
Qur'an Surah Al-Ma'idah Verse 69
ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِـُٔوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (المائدة : ٥)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டார்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்கள்
- hādū
- هَادُوا۟
- became Jews
- யூதர்கள்
- wal-ṣābiūna
- وَٱلصَّٰبِـُٔونَ
- and the Sabians
- இன்னும் சாபியீன்கள்
- wal-naṣārā
- وَٱلنَّصَٰرَىٰ
- and the Christians
- இன்னும் கிறித்தவர்கள்
- man
- مَنْ
- whoever
- எவர்
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- and the Day the Last
- இன்னும் இறுதி நாளை
- waʿamila
- وَعَمِلَ
- and did
- இன்னும் செய்தார்
- ṣāliḥan
- صَٰلِحًا
- good deeds
- நன்மையை
- falā khawfun
- فَلَا خَوْفٌ
- then no fear
- ஒரு பயமுமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- on them
- அவர்கள் மீது
- walā hum
- وَلَا هُمْ
- and not they
- இன்னும் அவர்கள் இல்லை
- yaḥzanūna
- يَحْزَنُونَ
- will grieve
- கவலைப்படுவார்கள்
Transliteration:
Innal lazeena aamanoo wallazeena haadoo was saabi'oona wan Nasaaraa man aamana billaahi wal yawmil Aakhiri wa 'amila saalihan falaa khawfun 'alaihim wa laa hum yahzanoon(QS. al-Māʾidah:69)
English Sahih International:
Indeed, those who have believed [in Prophet Muhammad (^)] and those [before him (^)] who were Jews or Sabeans or Christians – those [among them] who believed in Allah and the Last Day and did righteousness – no fear will there be concerning them, nor will they grieve. (QS. Al-Ma'idah, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௯)
Jan Trust Foundation
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.