Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௨

Qur'an Surah Al-Ma'idah Verse 62

ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَۗ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (المائدة : ٥)

watarā
وَتَرَىٰ
And you see
காண்பீர்
kathīran
كَثِيرًا
many
அதிகமானவர்களை
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
hastening
விரைபவர்களாக
fī l-ith'mi
فِى ٱلْإِثْمِ
into [the] sin
பாவத்தில்
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
and [the] transgression
இன்னும் அநியாயம்
wa-aklihimu
وَأَكْلِهِمُ
and eating
இன்னும் விழுங்குவது
l-suḥ'ta
ٱلسُّحْتَۚ
the forbidden
ஆகாத செல்வத்தை
labi'sa
لَبِئْسَ
Surely evil
கெட்டுவிட்டது
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
(is) what they were doing
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்

Transliteration:

Wa taraa kaseeram minhum yusaari'oona fil ismi wal'udwaani wa aklihimus suht; labi'sa maa kaanoo ya'maloon (QS. al-Māʾidah:62)

English Sahih International:

And you see many of them hastening into sin and aggression and the devouring of [what is] unlawful. How wretched is what they have been doing. (QS. Al-Ma'idah, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் செய்பவை மிகத் தீயவை! (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௨)

Jan Trust Foundation

அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களில் அதிகமானவர்களை பாவத்திலும், அநியாயத்திலும், ஆகாத செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக (நீர்) காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது!