Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௭

Qur'an Surah Al-Ma'idah Verse 57

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِيَاۤءَۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
(Do) not take
எடுத்துக் கொள்ளாதீர்கள்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
take
எடுத்துக்கொண்டார்கள்
dīnakum
دِينَكُمْ
your religion
உங்கள் மார்க்கத்தை
huzuwan
هُزُوًا
(in) ridicule
பரிகாசமாக
walaʿiban
وَلَعِبًا
and fun
இன்னும் விளையாட்டாக
mina
مِّنَ
from
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ūtū
أُوتُوا۟
are given
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
from before you
உங்களுக்குமுன்னர்
wal-kufāra
وَٱلْكُفَّارَ
and the disbelievers
இன்னும் நிராகரிப்பவர்களை
awliyāa
أَوْلِيَآءَۚ
(as) allies
நண்பர்களாக
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
in kuntum
إِن كُنتُم
if you are
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
believers
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul lazeenat takhazoo deenakum huzuwanw wa la'ibam minal lazeena ootul Kitaaba min qablikum walkuffaara awliyaaa'; wattaqul laaha in kuntum muu'mineen (QS. al-Māʾidah:57)

English Sahih International:

O you who have believed, take not those who have taken your religion in ridicule and amusement among the ones who were given the Scripture before you nor the disbelievers as allies. And fear Allah, if you should [truly] be believers. (QS. Al-Ma'idah, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர்களாகவும்) எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௭)

Jan Trust Foundation

முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.