Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௧

Qur'an Surah Al-Ma'idah Verse 51

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰٓى اَوْلِيَاۤءَ ۘ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
(Do) not take
ஆக்காதீர்கள்
l-yahūda
ٱلْيَهُودَ
the Jews
யூதர்களை
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰٓ
and the Christians
இன்னும் கிறித்தவர்களை
awliyāa
أَوْلِيَآءَۘ
(as) allies
நண்பர்களாக
baʿḍuhum
بَعْضُهُمْ
Some of them
அவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
(are) allies
நண்பர்கள்
baʿḍin
بَعْضٍۚ
(to) others
சிலரின்
waman
وَمَن
And whoever
எவர்
yatawallahum
يَتَوَلَّهُم
takes them as allies
நட்புகொள்வார்/அவர்களுடன்
minkum
مِّنكُمْ
among you
உங்களில்
fa-innahu
فَإِنَّهُۥ
then indeed, he
நிச்சயமாக அவர்
min'hum
مِنْهُمْۗ
(is) of them
அவர்களைச் சார்ந்தவர்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoing
அநியாயக்காரர்கள்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul Yahooda wan nasaaraaa awliyaaa'; ba'duhum awliyaaa'u ba'd; wa mai yatawallahum minkum fa innahoo minhum; innal laaha laa yahdil qawmaz zaalimeen (QS. al-Māʾidah:51)

English Sahih International:

O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you – then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people. (QS. Al-Ma'idah, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள். உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.