Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௮

Qur'an Surah Al-Ma'idah Verse 28

ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِيْ مَآ اَنَا۠ بِبَاسِطٍ يَّدِيَ اِلَيْكَ لِاَقْتُلَكَۚ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ (المائدة : ٥)

la-in
لَئِنۢ
If
basaṭta
بَسَطتَ
you stretch
நீங்கள் நீட்டினால்
ilayya
إِلَىَّ
towards me
என்னளவில்
yadaka
يَدَكَ
your hand
உன் கரத்தை
litaqtulanī
لِتَقْتُلَنِى
to kill me
நீ என்னைக் கொல்வ தற்காக
mā anā
مَآ أَنَا۠
not will I
நான் இல்லை
bibāsiṭin
بِبَاسِطٍ
stretch
நீட்டுபவனாக
yadiya
يَدِىَ
my hand
என் கரத்தை
ilayka
إِلَيْكَ
towards you
உன்னளவில்
li-aqtulaka
لِأَقْتُلَكَۖ
to kill you
நான் கொல்வதற்காக/உன்னை
innī
إِنِّىٓ
indeed I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
fear
பயப்படுகிறேன்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
rabba
رَبَّ
(the) Lord
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds"
அகிலத்தாரின்

Transliteration:

La'im basatta ilaiya yadaka litaqtulanee maaa ana bibaasitiny yadiya ilaika li aqtulaka inneee akhaaful laaha Rabbal 'aalameen (QS. al-Māʾidah:28)

English Sahih International:

If you should raise your hand toward me to kill me – I shall not raise my hand toward you to kill you. Indeed, I fear Allah, Lord of the worlds. (QS. Al-Ma'idah, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டு வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.