Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௪

Qur'an Surah Al-Ma'idah Verse 24

ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَآ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا ۖفَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَآ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ (المائدة : ٥)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
O Musa!
மூஸாவே!
innā
إِنَّا
Indeed, we
நிச்சயமாக நாங்கள்
lan nadkhulahā
لَن نَّدْخُلَهَآ
never will enter it
நுழையவேமாட்டோம் /அதில்
abadan
أَبَدًا
ever
அறவே
mā dāmū
مَّا دَامُوا۟
for as long as they are
அவர்கள் இருக்கும் காலமெல்லாம்
fīhā
فِيهَاۖ
in it
அதில்
fa-idh'hab anta
فَٱذْهَبْ أَنتَ
So go you
ஆகவே செல் / நீ
warabbuka
وَرَبُّكَ
and your Lord
இன்னும் உன் இறைவன்
faqātilā
فَقَٰتِلَآ
and you both fight
இருவரும் போரிடுங்கள்
innā
إِنَّا
Indeed, we
நிச்சயமாக நாங்கள்
hāhunā
هَٰهُنَا
are [here]
இங்கேதான்
qāʿidūna
قَٰعِدُونَ
sitting"
உட்கார்ந்திருப்போம்

Transliteration:

Qaaloo yaa Moosaaa innaa lan nadkhulahaa abadam maa daamoo feehaa fazhab anta wa Rabbuka faqaatilaaa innaa haahunaa qaa'idoon (QS. al-Māʾidah:24)

English Sahih International:

They said, "O Moses, indeed we will not enter it, ever, as long as they are within it; so go, you and your Lord, and fight. Indeed, we are remaining right here." (QS. Al-Ma'idah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழையவே மாட்டோம். ஆகவே, நீயும், உன் இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்" என்று கூறினர்.