Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௩

Qur'an Surah Al-Ma'idah Verse 13

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَاۤىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ (المائدة : ٥)

fabimā naqḍihim
فَبِمَا نَقْضِهِم
So for their breaking
ஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்
mīthāqahum
مِّيثَٰقَهُمْ
(of) their covenant
உறுதி மொழியை/தங்கள்
laʿannāhum
لَعَنَّٰهُمْ
We cursed them
சபித்தோம்/அவர்களை
wajaʿalnā
وَجَعَلْنَا
and We made
இன்னும் ஆக்கினோம்
qulūbahum
قُلُوبَهُمْ
their hearts
உள்ளங்களை/அவர்களுடைய
qāsiyatan
قَٰسِيَةًۖ
hard
இறுக்கமானதாக
yuḥarrifūna
يُحَرِّفُونَ
They distort
புரட்டுகிறார்கள்
l-kalima
ٱلْكَلِمَ
the words
வசனங்களை
ʿan
عَن
from
இருந்து
mawāḍiʿihi
مَّوَاضِعِهِۦۙ
their places
அதன் இடங்கள்
wanasū
وَنَسُوا۟
and forgot
இன்னும் மறந்தார்கள்
ḥaẓẓan
حَظًّا
a part
ஒரு பாகத்தை
mimmā
مِّمَّا
of what
எதிலிருந்து
dhukkirū bihi
ذُكِّرُوا۟ بِهِۦۚ
they were reminded of [it]
உபதேசிக்கப்பட்டார்கள்/அதை
walā tazālu taṭṭaliʿu
وَلَا تَزَالُ تَطَّلِعُ
And not will you cease to discover
கண்டுகொண்டே இருப்பீர்
ʿalā khāinatin
عَلَىٰ خَآئِنَةٍ
of treachery
மோசடியை
min'hum
مِّنْهُمْ
from them
அவர்களிடமிருந்து
illā
إِلَّا
except
தவிர
qalīlan
قَلِيلًا
a few
சிலரை
min'hum
مِّنْهُمْۖ
of them
அவர்களில்
fa-uʿ'fu
فَٱعْفُ
But forgive
ஆகவே மன்னிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
them
அவர்களை
wa-iṣ'faḥ
وَٱصْفَحْۚ
and overlook
இன்னும் புறக்கணிப்பீராக
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நற்பண்பாளர்களை

Transliteration:

Fabimaa naqdihim meesaa qahum la'annaahum wa ja'alnaa quloobahum qaasiyatany yuharrifoonal kalima 'ammawaadi'ihee wa nasoo hazzam mimmaa zukkiroo bih; khaaa'inatim minhum illaa qaleelam minhum fa'fu 'anhum wasfah; innal laaha yuhibbul muhsineen (QS. al-Māʾidah:13)

English Sahih International:

So for their breaking of the covenant We cursed them and made their hearts hardened. They distort words from their [proper] places [i.e., usages] and have forgotten a portion of that of which they were reminded. And you will still observe deceit among them, except a few of them. But pardon them and overlook [their misdeeds]. Indeed, Allah loves the doers of good. (QS. Al-Ma'idah, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டு கின்றார்கள். அன்றி, (நம்முடைய இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர்கள். ஆகவே, இ(வ்)வ(ற்ப)ர்களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய உள்ளங்களை இறுக்கமானதாக ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மை) இடங்களிலிருந்து புரட்டுகிறார்கள். அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பாகத்தை மறந்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர அ(திகமான)வர்களிடமிருந்து மோசடியை (நீர்) கண்டுகொண்டே இருப்பீர். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக; புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்களை நேசிக்கிறான்.