Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௮

Qur'an Surah Al-Ma'idah Verse 118

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚوَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (المائدة : ٥)

in tuʿadhib'hum
إِن تُعَذِّبْهُمْ
If You punish them
நீ வேதனை செய்தால்/அவர்களை
fa-innahum
فَإِنَّهُمْ
then indeed they
நிச்சயமாக அவர்கள்
ʿibāduka
عِبَادُكَۖ
(are) Your slaves
உன் அடியார்கள்
wa-in taghfir
وَإِن تَغْفِرْ
and if You forgive
நீ மன்னித்தால்
lahum
لَهُمْ
[for] them
அவர்களை
fa-innaka anta
فَإِنَّكَ أَنتَ
then indeed You You
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(are) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise"
ஞானவான்

Transliteration:

In tu'azzibhum fa innahum ibaaduka wa in taghfir lahum fa innaka Antal 'Azzezul Hakeem (QS. al-Māʾidah:118)

English Sahih International:

If You should punish them – indeed they are Your servants; but if You forgive them – indeed it is You who is the Exalted in Might, the Wise." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! (உன்னுடைய அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அன்றி, அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதனை தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்.) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால்... நிச்சயமாக நீதான் மிகைத்தவன், ஞானவான்.”