Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௪

Qur'an Surah Al-Ma'idah Verse 104

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَآ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَا ۗ اَوَلَوْ كَانَ اٰبَاۤؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْـًٔا وَّلَا يَهْتَدُوْنَ (المائدة : ٥)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
taʿālaw
تَعَالَوْا۟
"Come
வாருங்கள்
ilā
إِلَىٰ
to
பக்கம்
mā anzala
مَآ أَنزَلَ
what has (been) revealed
எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
wa-ilā
وَإِلَى
and to
இன்னும் பக்கம்
l-rasūli
ٱلرَّسُولِ
the Messenger"
தூதர்
qālū
قَالُوا۟
they said
கூறினர்
ḥasbunā
حَسْبُنَا
"Sufficient for us
எங்களுக்குப் போதும்
mā wajadnā
مَا وَجَدْنَا
(is) what we found
எது/கண்டோம்
ʿalayhi
عَلَيْهِ
upon it
அதன் மீது
ābāanā
ءَابَآءَنَآۚ
our forefathers"
எங்கள் மூதாதைகளை
awalaw kāna
أَوَلَوْ كَانَ
Even though (that)
இருந்தாலுமா?
ābāuhum
ءَابَآؤُهُمْ
their forefathers
மூதாதைகள் அவர்களுடைய
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
not knowing
அறியமாட்டார்கள்
shayan
شَيْـًٔا
anything
எதையும்
walā yahtadūna
وَلَا يَهْتَدُونَ
and not they (were) guided?
இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்

Transliteration:

Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli qaaloo hasbunaa maa wajadnaa 'alaihi aabaaa'anaa; awa law kaana aabaaa'uhum laa ya'lamoona shai'anw wa laa yahtadoon (QS. al-Māʾidah:104)

English Sahih International:

And when it is said to them, "Come to what Allah has revealed and to the Messenger," they say, "Sufficient for us is that upon which we found our fathers." Even though their fathers knew nothing, nor were they guided? (QS. Al-Ma'idah, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய தூதரின் பக்கமும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்!) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்." எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?