Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௯

Qur'an Surah Al-Hujurat Verse 9

ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ طَاۤىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِيْ تَبْغِيْ حَتّٰى تَفِيْۤءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۖفَاِنْ فَاۤءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ (الحجرات : ٤٩)

wa-in ṭāifatāni
وَإِن طَآئِفَتَانِ
And if two parties
இரு பிரிவினர்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
among the believers
நம்பிக்கையாளர்களில்
iq'tatalū
ٱقْتَتَلُوا۟
fight
தங்களுக்குள் சண்டையிட்டால்
fa-aṣliḥū
فَأَصْلِحُوا۟
then make peace
சமாதானம் செய்யுங்கள்!
baynahumā
بَيْنَهُمَاۖ
between both of them
அவ்விருவருக்கும் மத்தியில்
fa-in baghat
فَإِنۢ بَغَتْ
But if oppresses
எல்லை மீறினால்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
one of them
அவ்விருவரில் ஒரு பிரிவினர்
ʿalā l-ukh'rā
عَلَى ٱلْأُخْرَىٰ
on the other
மற்றொரு பிரிவினர்மீது
faqātilū
فَقَٰتِلُوا۟
then fight
சண்டை செய்யுங்கள்
allatī tabghī
ٱلَّتِى تَبْغِى
one which oppresses
எல்லை மீறுகின்றவர்களிடம்
ḥattā tafīa
حَتَّىٰ تَفِىٓءَ
until it returns
அவர்கள் திரும்புகின்றவரை
ilā amri
إِلَىٰٓ أَمْرِ
to (the) command
கட்டளையின் பக்கம்
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-in fāat
فَإِن فَآءَتْ
Then if it returns
அவர்கள் திரும்பிவிட்டால்
fa-aṣliḥū
فَأَصْلِحُوا۟
then make peace
சமாதானம் செய்யுங்கள்!
baynahumā
بَيْنَهُمَا
between them
அவ்விருவருக்கும் மத்தியில்
bil-ʿadli
بِٱلْعَدْلِ
with justice
நீதமாக
wa-aqsiṭū
وَأَقْسِطُوٓا۟ۖ
and act justly
இன்னும் நேர்மையாக இருங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கின்றான்
l-muq'siṭīna
ٱلْمُقْسِطِينَ
those who act justly
நேர்மையாளர்களை

Transliteration:

Wa in taaa'ifataani minal mu'mineenaq tataloo faaslihoo bainahumaa fa-im baghat ih daahumaa 'alal ukhraa faqaatilul latee tabhee hattaa tafeee'a ilaaa amril laah; fa-in faaa't fa aslihoo bainahumaa bil'adli wa aqsitoo innal laaha yuhibbul muqsiteen (QS. al-Ḥujurāt:9)

English Sahih International:

And if two factions among the believers should fight, then make settlement between the two. But if one of them oppresses the other, then fight against the one that oppresses until it returns to the ordinance of Allah. And if it returns, then make settlement between them in justice and act justly. Indeed, Allah loves those who act justly. (QS. Al-Hujurat, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளார்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௯)

Jan Trust Foundation

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விருவருக்கும் மத்தியில் சமாதானம் செய்யுங்கள்! அவ்விருவரில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது எல்லை மீறினால் எல்லை மீறுகின்றவர்களிடம் சண்டை செய்யுங்கள் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் திரும்புகின்றவரை. அவர்கள் திரும்பிவிட்டால் அவ்விருவர்களுக்கும் மத்தியில் நீதமாக சமாதானம் செய்யுங்கள்! இன்னும் நேர்மையாக இருங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நேர்மையாளர்களை நேசிக்கின்றான்.