குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௬
Qur'an Surah Al-Hujurat Verse 6
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ جَاۤءَكُمْ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْٓا اَنْ تُصِيْبُوْا قَوْمًاۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ (الحجرات : ٤٩)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே!
- in jāakum
- إِن جَآءَكُمْ
- If comes to you
- உங்களிடம் வந்தால்
- fāsiqun
- فَاسِقٌۢ
- a wicked person
- பாவியான ஒருவர்
- binaba-in
- بِنَبَإٍ
- with information
- ஒரு செய்தியைக் கொண்டு
- fatabayyanū
- فَتَبَيَّنُوٓا۟
- investigate
- நன்கு தெளிவு பெறுங்கள்!
- an tuṣībū
- أَن تُصِيبُوا۟
- lest you harm
- நீங்கள்சேதமேற்படுத்தி விடாமல் இருப்பதற்காக
- qawman
- قَوْمًۢا
- a people
- ஒரு கூட்டத்திற்கு
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- in ignorance
- அறியாமல்
- fatuṣ'biḥū
- فَتُصْبِحُوا۟
- then you become
- ஆகிவிடுவீர்கள்
- ʿalā mā faʿaltum
- عَلَىٰ مَا فَعَلْتُمْ
- over what you have done
- நீங்கள் செய்ததற்காக
- nādimīna
- نَٰدِمِينَ
- regretful
- வருந்தியவர்களாக
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo in jaaa'akum faasqum binaba in fatabaiyanooo an tuseeboo qawmam bijahalatin fatusbihoo 'alaa maa fa'altum naadimeen(QS. al-Ḥujurāt:6)
English Sahih International:
O you who have believed, if there comes to you a disobedient one with information, investigate, lest you harm a people out of ignorance and become, over what you have done, regretful. (QS. Al-Hujurat, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௬)
Jan Trust Foundation
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! உங்களிடம் பாவியான ஒருவர் (ஒரு கூட்டத்தைப் பற்றி) ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் (அந்த செய்தியைப் பற்றி) நன்கு தெளிவு பெறுங்கள்! (-அவசரப்படாமல், செய்தியை உறுதிசெய்து கொள்ளுங்கள்!) ஒரு கூட்டத்திற்கு (அவர்களைப் பற்றி சரியாக) அறியாமல் நீங்கள் சேதமேற்படுத்திவிடாமல் இருப்பதற்காக. (அப்படி செய்யவில்லையென்றால்) நீங்கள் செய்ததற்காக வருந்தியவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.