குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௪
Qur'an Surah Al-Hujurat Verse 4
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَاۤءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ (الحجرات : ٤٩)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna yunādūnaka
- ٱلَّذِينَ يُنَادُونَكَ
- those who call you
- உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள்
- min warāi
- مِن وَرَآءِ
- from behind
- பின்னால் இருந்து
- l-ḥujurāti
- ٱلْحُجُرَٰتِ
- the private chambers
- அறைகளுக்கு
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- most of them
- அவர்களில் அதிகமானவர்கள்
- lā yaʿqilūna
- لَا يَعْقِلُونَ
- (do) not understand
- அறியமாட்டார்கள்
Transliteration:
Innal lazeena yunaadoo naka minw waraaa'il hujuraati aksaruhum laa ya'qiloon(QS. al-Ḥujurāt:4)
English Sahih International:
Indeed, those who call you, [O Muhammad], from behind the chambers – most of them do not use reason. (QS. Al-Hujurat, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்கள் (நீங்கள் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உங்களை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களே! (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௪)
Jan Trust Foundation
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக (நீர் தங்கி இருக்கின்ற) அறைகளுக்குப் பின்னால் இருந்து உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள் - அவர்களில் அதிகமானவர்கள் (உங்கள் கண்ணியத்தை) அறியமாட்டார்கள்.