குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௩
Qur'an Surah Al-Hujurat Verse 3
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰىۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ (الحجرات : ٤٩)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna yaghuḍḍūna
- ٱلَّذِينَ يَغُضُّونَ
- those who lower
- தாழ்த்திக் கொள்பவர்கள்
- aṣwātahum
- أَصْوَٰتَهُمْ
- their voices
- தங்கள் சப்தங்களை
- ʿinda
- عِندَ
- (in) presence
- அருகில்
- rasūli
- رَسُولِ
- (of the) Messenger of Allah
- தூதருக்கு
- l-lahi
- ٱللَّهِ
- (of the) Messenger of Allah
- அல்லாஹ்வின்
- ulāika alladhīna
- أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
- those (are) the ones
- அவர்களைத்தான்
- im'taḥana
- ٱمْتَحَنَ
- Allah has tested
- சோதித்து தேர்வு செய்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah has tested
- அல்லாஹ்
- qulūbahum
- قُلُوبَهُمْ
- their hearts
- அவர்களுடைய உள்ளங்களை
- lilttaqwā
- لِلتَّقْوَىٰۚ
- for righteousness
- இறையச்சத்திற்காக
- lahum
- لَهُم
- For them
- அவர்களுக்கு உண்டு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- (is) forgiveness
- மன்னிப்பு(ம்)
- wa-ajrun ʿaẓīmun
- وَأَجْرٌ عَظِيمٌ
- and a reward great
- மகத்தான கூலியும்
Transliteration:
Innal lazeena yaghud doona aswaatahum 'inda Rasoolil laahi ulaaa'ikal lazeenam tah anal laahu quloobahum littaqwaa; lahum maghfiratunw waajrun 'azeem(QS. al-Ḥujurāt:3)
English Sahih International:
Indeed, those who lower their voices before the Messenger of Allah – they are the ones whose hearts Allah has tested for righteousness. For them is forgiveness and great reward. (QS. Al-Hujurat, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து பரிசுத்தத்தன்மைக்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு. (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௩)
Jan Trust Foundation
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக தங்கள் சப்தங்களை (-குரல்களை) அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்பவர்கள் -அவர்களுடைய உள்ளங்களைத்தான் இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து தேர்வு செய்துள்ளான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.