குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௨
Qur'an Surah Al-Hujurat Verse 2
ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْٓا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ (الحجرات : ٤٩)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே!
- lā tarfaʿū
- لَا تَرْفَعُوٓا۟
- (Do) not raise
- உயர்த்தாதீர்கள்!
- aṣwātakum
- أَصْوَٰتَكُمْ
- your voices
- உங்கள் சப்தங்களை
- fawqa
- فَوْقَ
- above
- மேல்
- ṣawti
- صَوْتِ
- (the) voice
- சப்தத்திற்கு
- l-nabiyi
- ٱلنَّبِىِّ
- (of) the Prophet
- நபியின்
- walā tajharū
- وَلَا تَجْهَرُوا۟
- and (do) not be loud
- இன்னும் உரக்கப் பேசாதீர்கள்!
- lahu
- لَهُۥ
- to him
- அவருக்கு முன்
- bil-qawli
- بِٱلْقَوْلِ
- in speech
- பேசுவதில்
- kajahri
- كَجَهْرِ
- like (the) loudness
- உரக்கப் பேசுவதைப் போல்
- baʿḍikum
- بَعْضِكُمْ
- (of) some of you
- உங்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- to others
- சிலருக்கு முன்
- an taḥbaṭa
- أَن تَحْبَطَ
- lest become worthless
- பாழாகிவிடாமல் இருப்பதற்காக
- aʿmālukum
- أَعْمَٰلُكُمْ
- your deeds
- உங்கள் அமல்கள்
- wa-antum lā tashʿurūna
- وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
- while you (do) not perceive
- நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
Transliteration:
Yaa ayyuhal lazeena aamanoo laa tarfa'ooo aswaatakum fawqa sawtin Nabiyi wa laa tajharoo lahoo bilqawli kajahri ba'dikum liba 'din an tahbata a 'maalukum wa antum laa tash'uroon(QS. al-Ḥujurāt:2)
English Sahih International:
O you who have believed, do not raise your voices above the voice of the Prophet or be loud to him in speech like the loudness of some of you to others, lest your deeds become worthless while you perceive not. (QS. Al-Hujurat, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சல் இட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது. (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௨)
Jan Trust Foundation
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நபியின் சப்தத்திற்கு மேல் உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்! உங்களில் சிலர் சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக.