Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௩

Qur'an Surah Al-Hujurat Verse 13

ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَاۤىِٕلَ لِتَعَارَفُوْا ۚ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ (الحجرات : ٤٩)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind! O mankind!
மக்களே!
innā
إِنَّا
Indeed, We
நிச்சயமாக நாம்
khalaqnākum
خَلَقْنَٰكُم
created you
உங்களைப் படைத்தோம்
min dhakarin
مِّن ذَكَرٍ
from a male
ஓர் ஆணிலிருந்து
wa-unthā
وَأُنثَىٰ
and a female
இன்னும் ஒரு பெண்
wajaʿalnākum
وَجَعَلْنَٰكُمْ
and We made you
இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
shuʿūban
شُعُوبًا
nations
பல நாட்டவர்களாக(வும்)
waqabāila
وَقَبَآئِلَ
and tribes
பல குலத்தவர்களாகவும்
litaʿārafū
لِتَعَارَفُوٓا۟ۚ
that you may know one another
நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
akramakum
أَكْرَمَكُمْ
(the) most noble of you
உங்களில் மிக கண்ணியமானவர்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
near Allah
அல்லாஹ்விடம்
atqākum
أَتْقَىٰكُمْۚ
(is the) most righteous of you
உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
khabīrun
خَبِيرٌ
All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Yaaa ayyuhan naasu innaa khalaqnaakum min zakarinw wa unsaa wa ja'alnaakum shu'oobanw wa qabaaa'ila lita'aarafoo inna akramakum 'indal laahi atqaakum innal laaha 'Aleemun khabeer (QS. al-Ḥujurāt:13)

English Sahih International:

O mankind, indeed We have created you from male and female and made you peoples and tribes that you may know one another. Indeed, the most noble of you in the sight of Allah is the most righteous of you. Indeed, Allah is Knowing and Aware. (QS. Al-Hujurat, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். உங்களை பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் நாம் ஆக்கினோம். நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் ஒருவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.