Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் - Word by Word

Al-Hujurat

(al-Ḥujurāt)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَيِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tuqaddimū
لَا تُقَدِّمُوا۟
நீங்கள் முந்தாதீர்கள்
bayna yadayi
بَيْنَ يَدَىِ
முன்பாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlihi
وَرَسُولِهِۦۖ
அவனது தூதருக்கும்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْٓا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tarfaʿū
لَا تَرْفَعُوٓا۟
உயர்த்தாதீர்கள்!
aṣwātakum
أَصْوَٰتَكُمْ
உங்கள் சப்தங்களை
fawqa
فَوْقَ
மேல்
ṣawti
صَوْتِ
சப்தத்திற்கு
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபியின்
walā tajharū
وَلَا تَجْهَرُوا۟
இன்னும் உரக்கப் பேசாதீர்கள்!
lahu
لَهُۥ
அவருக்கு முன்
bil-qawli
بِٱلْقَوْلِ
பேசுவதில்
kajahri
كَجَهْرِ
உரக்கப் பேசுவதைப் போல்
baʿḍikum
بَعْضِكُمْ
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு முன்
an taḥbaṭa
أَن تَحْبَطَ
பாழாகிவிடாமல் இருப்பதற்காக
aʿmālukum
أَعْمَٰلُكُمْ
உங்கள் அமல்கள்
wa-antum lā tashʿurūna
وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சல் இட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது. ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௨)
Tafseer

اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰىۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ ٣

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yaghuḍḍūna
ٱلَّذِينَ يَغُضُّونَ
தாழ்த்திக் கொள்பவர்கள்
aṣwātahum
أَصْوَٰتَهُمْ
தங்கள் சப்தங்களை
ʿinda
عِندَ
அருகில்
rasūli
رَسُولِ
தூதருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ulāika alladhīna
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
அவர்களைத்தான்
im'taḥana
ٱمْتَحَنَ
சோதித்து தேர்வு செய்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qulūbahum
قُلُوبَهُمْ
அவர்களுடைய உள்ளங்களை
lilttaqwā
لِلتَّقْوَىٰۚ
இறையச்சத்திற்காக
lahum
لَهُم
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு(ம்)
wa-ajrun ʿaẓīmun
وَأَجْرٌ عَظِيمٌ
மகத்தான கூலியும்
எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து பரிசுத்தத்தன்மைக்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு. ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௩)
Tafseer

اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَاۤءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ٤

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yunādūnaka
ٱلَّذِينَ يُنَادُونَكَ
உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள்
min warāi
مِن وَرَآءِ
பின்னால் இருந்து
l-ḥujurāti
ٱلْحُجُرَٰتِ
அறைகளுக்கு
aktharuhum
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) எவர்கள் (நீங்கள் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உங்களை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களே! ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௪)
Tafseer

وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥

walaw annahum ṣabarū
وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால்
ḥattā takhruja
حَتَّىٰ تَخْرُجَ
வரை/நீர் வெளியேறி வருகின்ற
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
lakāna
لَكَانَ
அது இருந்திருக்கும்
khayran
خَيْرًا
நன்றாக
lahum
لَّهُمْۚ
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(உங்களது அறையிலிருந்து) நீங்கள் வெளிப்பட்டு அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௫)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ جَاۤءَكُمْ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْٓا اَنْ تُصِيْبُوْا قَوْمًاۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ ٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
in jāakum
إِن جَآءَكُمْ
உங்களிடம் வந்தால்
fāsiqun
فَاسِقٌۢ
பாவியான ஒருவர்
binaba-in
بِنَبَإٍ
ஒரு செய்தியைக் கொண்டு
fatabayyanū
فَتَبَيَّنُوٓا۟
நன்கு தெளிவு பெறுங்கள்!
an tuṣībū
أَن تُصِيبُوا۟
நீங்கள்சேதமேற்படுத்தி விடாமல் இருப்பதற்காக
qawman
قَوْمًۢا
ஒரு கூட்டத்திற்கு
bijahālatin
بِجَهَٰلَةٍ
அறியாமல்
fatuṣ'biḥū
فَتُصْبِحُوا۟
ஆகிவிடுவீர்கள்
ʿalā mā faʿaltum
عَلَىٰ مَا فَعَلْتُمْ
நீங்கள் செய்ததற்காக
nādimīna
نَٰدِمِينَ
வருந்தியவர்களாக
நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௬)
Tafseer

وَاعْلَمُوْٓا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ ۗ لَوْ يُطِيْعُكُمْ فِيْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِيْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الرَّاشِدُوْنَۙ ٧

wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்துகொள்ளுங்கள்!
anna
أَنَّ
நிச்சயமாக
fīkum
فِيكُمْ
உங்களுக்கு மத்தியில்
rasūla l-lahi
رَسُولَ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் தூதர்
law yuṭīʿukum
لَوْ يُطِيعُكُمْ
அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால்
fī kathīrin
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
mina l-amri
مِّنَ ٱلْأَمْرِ
காரியங்களில்
laʿanittum
لَعَنِتُّمْ
நீங்கள் சிரமப்பட்டுவிடுவீர்கள்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ḥabbaba
حَبَّبَ
விருப்பமாக்கினான்
ilaykumu l-īmāna
إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ
உங்களுக்கு ஈமானை
wazayyanahu
وَزَيَّنَهُۥ
இன்னும் அதை அலங்கரித்தான்
fī qulūbikum
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
wakarraha
وَكَرَّهَ
இன்னும் வெறுப்பாக்கினான்
ilaykumu
إِلَيْكُمُ
உங்களிடம்
l-kuf'ra
ٱلْكُفْرَ
இறை நிராகரிப்பை(யும்)
wal-fusūqa
وَٱلْفُسُوقَ
பாவத்தையும்
wal-ʿiṣ'yāna
وَٱلْعِصْيَانَۚ
மாறுசெய்வதையும்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
இத்தகையவர்கள்தான்
l-rāshidūna
ٱلرَّٰشِدُونَ
சத்தியவழி நடப்பவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கின்றார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதனையே அழகாக்கியும் வைத்தான். அன்றி, நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான். இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௭)
Tafseer

فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٨

faḍlan
فَضْلًا
அருளாக(வும்)
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
waniʿ'matan
وَنِعْمَةًۚ
கிருபையாகவும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
(மிகச் சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௮)
Tafseer

وَاِنْ طَاۤىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِيْ تَبْغِيْ حَتّٰى تَفِيْۤءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۖفَاِنْ فَاۤءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ ٩

wa-in ṭāifatāni
وَإِن طَآئِفَتَانِ
இரு பிரிவினர்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
iq'tatalū
ٱقْتَتَلُوا۟
தங்களுக்குள் சண்டையிட்டால்
fa-aṣliḥū
فَأَصْلِحُوا۟
சமாதானம் செய்யுங்கள்!
baynahumā
بَيْنَهُمَاۖ
அவ்விருவருக்கும் மத்தியில்
fa-in baghat
فَإِنۢ بَغَتْ
எல்லை மீறினால்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒரு பிரிவினர்
ʿalā l-ukh'rā
عَلَى ٱلْأُخْرَىٰ
மற்றொரு பிரிவினர்மீது
faqātilū
فَقَٰتِلُوا۟
சண்டை செய்யுங்கள்
allatī tabghī
ٱلَّتِى تَبْغِى
எல்லை மீறுகின்றவர்களிடம்
ḥattā tafīa
حَتَّىٰ تَفِىٓءَ
அவர்கள் திரும்புகின்றவரை
ilā amri
إِلَىٰٓ أَمْرِ
கட்டளையின் பக்கம்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
fa-in fāat
فَإِن فَآءَتْ
அவர்கள் திரும்பிவிட்டால்
fa-aṣliḥū
فَأَصْلِحُوا۟
சமாதானம் செய்யுங்கள்!
baynahumā
بَيْنَهُمَا
அவ்விருவருக்கும் மத்தியில்
bil-ʿadli
بِٱلْعَدْلِ
நீதமாக
wa-aqsiṭū
وَأَقْسِطُوٓا۟ۖ
இன்னும் நேர்மையாக இருங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கின்றான்
l-muq'siṭīna
ٱلْمُقْسِطِينَ
நேர்மையாளர்களை
நம்பிக்கையாளார்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௯)
Tafseer
௧௦

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ࣖ ١٠

innamā l-mu'minūna
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
ikh'watun
إِخْوَةٌ
சகோதரர்கள் ஆவர்
fa-aṣliḥū
فَأَصْلِحُوا۟
ஆகவே சமாதானம் செய்யுங்கள்!
bayna
بَيْنَ
மத்தியில்
akhawaykum
أَخَوَيْكُمْۚ
உங்கள் இரு சகோதரர்களுக்கு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௦)
Tafseer