Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௯

Qur'an Surah Al-Fath Verse 9

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُۗ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا (الفتح : ٤٨)

litu'minū
لِّتُؤْمِنُوا۟
That you may believe
நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக(வும்)
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
அவனது தூதரையும்
watuʿazzirūhu
وَتُعَزِّرُوهُ
and (may) honor him
அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும்
watuwaqqirūhu
وَتُوَقِّرُوهُ
and respect him
அவரை மதிப்பதற்காகவும்
watusabbiḥūhu
وَتُسَبِّحُوهُ
and glorify Him
அவனைப் புகழ்ந்து துதிப்பதற்காகவும்
buk'ratan
بُكْرَةً
morning
காலை(யிலும்)
wa-aṣīlan
وَأَصِيلًا
and evening
மாலையிலும்

Transliteration:

Litu minoo billaahi wa Rasoolihee wa tu'azziroohu watuwaqqiroohu watusabbi hoohu bukratanw wa aseelaa (QS. al-Fatḥ:9)

English Sahih International:

That you [people] may believe in Allah and His Messenger and honor him and respect him [i.e., the Prophet (^)] and exalt Him [i.e., Allah] morning and afternoon. (QS. Al-Fath, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௯)

Jan Trust Foundation

(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவரை மதிப்பதற்காகவும் அவனை (-அல்லாஹ்வை) காலையிலும் மாலையிலும் புகழ்ந்து துதிப்பதற் காகவும் (அவன் தனது தூதரை உங்களிடம் அனுப்பினான்).