குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௪
Qur'an Surah Al-Fath Verse 4
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْٓ اَنْزَلَ السَّكِيْنَةَ فِيْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْٓا اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْ ۗ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًاۙ (الفتح : ٤٨)
- huwa
- هُوَ
- He
- அவன்தான்
- alladhī
- ٱلَّذِىٓ
- (is) the One Who
- எப்படிப்பட்டவன்
- anzala
- أَنزَلَ
- sent down
- இறக்கினான்
- l-sakīnata
- ٱلسَّكِينَةَ
- [the] tranquility
- அமைதியை
- fī qulūbi
- فِى قُلُوبِ
- in(to) (the) hearts
- உள்ளங்களில்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- (of) the believers
- நம்பிக்கையாளர்களின்
- liyazdādū
- لِيَزْدَادُوٓا۟
- that they may increase
- அவர்கள் அதிகரிப்பதற்காக
- īmānan
- إِيمَٰنًا
- (in) faith
- நம்பிக்கையால்
- maʿa īmānihim
- مَّعَ إِيمَٰنِهِمْۗ
- with their faith
- அவர்கள் தங்கள் நம்பிக்கையுடன்
- walillahi
- وَلِلَّهِ
- And for Allah
- அல்லாஹ்விற்கு உரியனவே
- junūdu
- جُنُودُ
- (are the) hosts
- இராணுவங்கள்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- and the earth
- இன்னும் பூமியின்
- wakāna
- وَكَانَ
- and Allah
- இருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- ʿalīman
- عَلِيمًا
- (is) All-Knower
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- All-Wise
- மகா ஞானவானாக
Transliteration:
Huwal lazeee anzalas sakeenata fee quloobil mu'mineena liyazdaadooo eemaanamma'a eemaanihim; wa lillaahi junoodus samawaati wal ard; wa kaanal laahu 'Aleeman Hakeemaa(QS. al-Fatḥ:4)
English Sahih International:
It is He who sent down tranquility into the hearts of the believers that they would increase in faith along with their [present] faith. And to Allah belong the soldiers of the heavens and the earth, and ever is Allah Knowing and Wise. (QS. Al-Fath, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலிய வைகளிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவைகளைக் கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௪)
Jan Trust Foundation
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த முந்திய) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) நம்பிக்கையால் மேலும் அதிகரிப்பதற்காக (அவன் நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கு உரியனவே. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கின்றான்.