Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௯

Qur'an Surah Al-Fath Verse 29

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ۗوَالَّذِيْنَ مَعَهٗٓ اَشِدَّاۤءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاۤءُ بَيْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ۖ سِيْمَاهُمْ فِيْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ۗذٰلِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰىةِ ۖوَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيْظَ بِهِمُ الْكُفَّارَ ۗوَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا ࣖ (الفتح : ٤٨)

muḥammadun
مُّحَمَّدٌ
Muhammad
முஹம்மது
rasūlu l-lahi
رَّسُولُ ٱللَّهِۚ
(is the) Messenger of Allah (is the) Messenger of Allah
அல்லாஹ்வின் தூதர்
wa-alladhīna maʿahu
وَٱلَّذِينَ مَعَهُۥٓ
and those who (are) with him
அவருடன் இருக்கின்றவர்கள்
ashiddāu
أَشِدَّآءُ
(are) firm
கடினமானவர்கள்
ʿalā l-kufāri
عَلَى ٱلْكُفَّارِ
against the disbelievers
நிராகரிப்பாளர்கள்மீது
ruḥamāu
رُحَمَآءُ
and merciful
கருணையாளர்கள்
baynahum
بَيْنَهُمْۖ
among themselves
தங்களுக்கு மத்தியில்
tarāhum
تَرَىٰهُمْ
You see them
நீர் அவர்களைக்காண்பீர்
rukkaʿan
رُكَّعًا
bowing
ருகூஃசெய்தவர்களாக
sujjadan
سُجَّدًا
and prostrating
சுஜூது செய்தவர்களாக
yabtaghūna
يَبْتَغُونَ
seeking
அவர்கள் விரும்புகிறார்கள்
faḍlan
فَضْلًا
Bounty
அருளை(யும்)
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah from Allah
அல்லாஹ்வின்
wariḍ'wānan
وَرِضْوَٰنًاۖ
and pleasure
பொருத்தத்தையும்
sīmāhum
سِيمَاهُمْ
Their mark
அவர்களின் தோற்றம்
fī wujūhihim
فِى وُجُوهِهِم
(is) on their faces
அவர்களின் முகங்களில்
min athari
مِّنْ أَثَرِ
from (the) trace
அடையாளமாக
l-sujūdi
ٱلسُّجُودِۚ
(of) the prostration
சுஜூதின்
dhālika
ذَٰلِكَ
That
இது
mathaluhum
مَثَلُهُمْ
(is) their similitude
அவர்களின் தன்மையாகும்
fī l-tawrāti
فِى ٱلتَّوْرَىٰةِۚ
in the Taurah
தவ்றாத்தில் கூறப்பட்ட
wamathaluhum
وَمَثَلُهُمْ
And their similitude
இன்னும் அவர்களின் தன்மையாவது
fī l-injīli
فِى ٱلْإِنجِيلِ
in the Injeel
இன்ஜீலில் கூறப்பட்ட
kazarʿin
كَزَرْعٍ
(is) like a seed
ஒரு விளைச்சலைப் போலாகும்
akhraja
أَخْرَجَ
(which) sends forth
வெளியாக்கியது
shaṭahu
شَطْـَٔهُۥ
its shoot
தனது காம்பை
faāzarahu
فَـَٔازَرَهُۥ
then strengthens it
இன்னும் அதை பலப்படுத்தியது
fa-is'taghlaẓa
فَٱسْتَغْلَظَ
then it becomes thick
பிறகு அது தடிப்பமாக ஆனது
fa-is'tawā
فَٱسْتَوَىٰ
and it stands
அது உயர்ந்து நின்று
ʿalā sūqihi
عَلَىٰ سُوقِهِۦ
upon its stem
தனது தண்டின் மீது
yuʿ'jibu
يُعْجِبُ
delighting
கவர்கிறது
l-zurāʿa
ٱلزُّرَّاعَ
the sowers
விவசாயிகளை
liyaghīẓa
لِيَغِيظَ
that He (may) enrage
அவன் ரோஷமூட்டுவதற்காக
bihimu
بِهِمُ
by them
அவர்கள் மூலமாக
l-kufāra
ٱلْكُفَّارَۗ
the disbelievers
நிராகரிப்பாளர்களை
waʿada
وَعَدَ
Allah has promised
வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
Allah has promised
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believe
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
min'hum
مِنْهُم
among them
அவர்களில்
maghfiratan
مَّغْفِرَةً
forgiveness
மன்னிப்பை(யும்)
wa-ajran ʿaẓīman
وَأَجْرًا عَظِيمًۢا
and a reward great
மகத்தானகூலியையும்

Transliteration:

Muhammadur Rasoolul laah; wallazeena ma'ahooo ashiddaaa'u 'alal kuffaaari ruhamaaa'u bainahum taraahum rukka'an sujjadany yabtaghoona fadlam minal laahi wa ridwaanan seemaahum fee wujoohihim min asaris sujood; zaalika masaluhum fit tawraah; wa masaluhum fil Injeeli kazar'in akhraja shat 'ahoo fa 'aazarahoo fastaghlaza fastawaa 'alaa sooqihee yu'jibuz zurraa'a liyagheeza bihimul kuffaar; wa'adal laahul lazeena aamanoo wa 'amilus saalihaati minhum maghfiratanw wa ajran 'azeemaa (QS. al-Fatḥ:29)

English Sahih International:

Muhammad is the Messenger of Allah; and those with him are forceful against the disbelievers, merciful among themselves. You see them bowing and prostrating [in prayer], seeking bounty from Allah and [His] pleasure. Their sign is in their faces from the effect of prostration [i.e., prayer]. That is their description in the Torah. And their description in the Gospel is as a plant which produces its offshoots and strengthens them so they grow firm and stand upon their stalks, delighting the sowers – so that He [i.e., Allah] may enrage by them the disbelievers. Allah has promised those who believe and do righteous deeds among them forgiveness and a great reward. (QS. Al-Fath, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர் களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன்னுடைய தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றான். எனினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௨௯)

Jan Trust Foundation

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது| அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது| ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவருடன் இருக்கின்றவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில்) ருகூஃ செய்தவர்களாக சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூ(சிரம் பணிந்து வணங்குவ)தின் அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும் அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. தனது தண்டின் மீது அது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்,) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களை அவன் ரோஷமூட்டுவதற்காக. அவர்களில் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்துள்ளான்.