குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௬
Qur'an Surah Al-Fath Verse 26
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ جَعَلَ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ قُلُوْبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰى وَكَانُوْٓا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ۗوَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ (الفتح : ٤٨)
- idh jaʿala
- إِذْ جَعَلَ
- When had put
- ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்!
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- நிராகரித்தவர்கள்
- fī qulūbihimu
- فِى قُلُوبِهِمُ
- in their hearts
- தங்கள் உள்ளங்களில்
- l-ḥamiyata
- ٱلْحَمِيَّةَ
- disdain
- திமிரை
- ḥamiyyata
- حَمِيَّةَ
- (the) disdain
- திமிரை
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِ
- (of) the time of ignorance
- அறியாமைக்கால
- fa-anzala
- فَأَنزَلَ
- Then Allah sent down
- இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- Then Allah sent down
- அல்லாஹ்
- sakīnatahu
- سَكِينَتَهُۥ
- His tranquility
- தன் அமைதியை
- ʿalā rasūlihi
- عَلَىٰ رَسُولِهِۦ
- upon His Messenger
- தனது தூதர் மீதும்
- waʿalā
- وَعَلَى
- and upon
- மீதும்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- wa-alzamahum
- وَأَلْزَمَهُمْ
- and made them adhere
- இன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான்
- kalimata
- كَلِمَةَ
- (to the) word
- வார்த்தையை
- l-taqwā
- ٱلتَّقْوَىٰ
- (of) righteousness
- இறையச்சத்தின்
- wakānū
- وَكَانُوٓا۟
- and they were
- இன்னும் இருந்தார்கள்
- aḥaqqa
- أَحَقَّ
- more deserving
- மிகத் தகுதியுடைவர்களாக
- bihā
- بِهَا
- of it
- அதற்கு
- wa-ahlahā
- وَأَهْلَهَاۚ
- and worthy of it
- இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாக
- wakāna l-lahu
- وَكَانَ ٱللَّهُ
- And is Allah
- அல்லாஹ் இருக்கின்றான்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- ʿalīman
- عَلِيمًا
- All-Knower
- நன்கறிந்தவனாக
Transliteration:
Iz ja'alal lazeena kafaroo fee quloobihimul hamiyyata hamiyyatal jaahiliyyati fa anzalal laahu sakeenatahoo 'alaa Rasoolihee wa 'alal mu mineena wa alzamahum kalimatat taqwaa wa kaanooo ahaqqa bihaa wa ahlahaa; wa kaanal laahu bikulli shai'in Aleema(QS. al-Fatḥ:26)
English Sahih International:
When those who disbelieved had put into their hearts chauvinism – the chauvinism of the time of ignorance. But Allah sent down His tranquility upon His Messenger and upon the believers and imposed upon them the word of righteousness, and they were more deserving of it and worthy of it. And ever is Allah, of all things, Knowing. (QS. Al-Fath, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
நிராகரித்தவர்கள் தங்களுடைய உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன்னுடைய ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதனை அடைய வேண்டியவர் களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௨௬)
Jan Trust Foundation
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! (அப்போது) அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். அவர்களுக்கு இறையச்சத்தின் வார்த்தையை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படி செய்தான்.) அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.