குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௪
Qur'an Surah Al-Fath Verse 24
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ كَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْ وَاَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۗوَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا (الفتح : ٤٨)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- kaffa
- كَفَّ
- withheld
- தடுத்தான்
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- their hands
- அவர்களின்கரங்களை
- ʿankum
- عَنكُمْ
- from you
- உங்களை விட்டும்
- wa-aydiyakum
- وَأَيْدِيَكُمْ
- and your hands
- இன்னும் உங்கள் கரங்களை
- ʿanhum
- عَنْهُم
- from them
- அவர்களை விட்டும்
- bibaṭni
- بِبَطْنِ
- within
- நடுப்பகுதியில்
- makkata
- مَكَّةَ
- Makkah
- மக்காவின்
- min baʿdi an
- مِنۢ بَعْدِ أَنْ
- after after that
- அவன் வெற்றி கொடுத்த பின்னர்
- aẓfarakum
- أَظْفَرَكُمْ
- He gave you victory
- அவன் வெற்றி கொடுத்த பின்னர் உங்களுக்கு
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- over them
- அவர்கள் மீது
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
- baṣīran
- بَصِيرًا
- All-Seer
- உற்று நோக்கியவனாக
Transliteration:
Wa Huwal lazee kaffa aydiyahum 'ankum wa aydiyakum 'anhum bibatni Makkata mim ba'di an azfarakum 'alaihim; wa kaanal laahu bimaa ta'maloona Baseera(QS. al-Fatḥ:24)
English Sahih International:
And it is He who withheld their hands from you and your hands from them within [the area of] Makkah after He caused you to overcome them. And ever is Allah, of what you do, Seeing. (QS. Al-Fath, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக்கொண்டான். (அவ்வாறே) உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்தவைகளை உற்று நோக்கியவனாகவே இருந்தான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௨௪)
Jan Trust Foundation
இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றி கொடுத்த பின்னர். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.