குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨
Qur'an Surah Al-Fath Verse 2
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّيَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًاۙ (الفتح : ٤٨)
- liyaghfira
- لِّيَغْفِرَ
- That may forgive
- மன்னிப்பதற்காக(வும்)
- laka l-lahu
- لَكَ ٱللَّهُ
- for you Allah
- உமக்கு/அல்லாஹ்
- mā taqaddama
- مَا تَقَدَّمَ
- what preceded
- முந்தியதையும்
- min dhanbika
- مِن ذَنۢبِكَ
- of your fault
- உமது பாவத்தில்
- wamā ta-akhara
- وَمَا تَأَخَّرَ
- and what will follow
- பிந்தியதையும்
- wayutimma
- وَيُتِمَّ
- and complete
- முழுமைப்படுத்துவதற்காகவும்
- niʿ'matahu
- نِعْمَتَهُۥ
- His favor
- அவனது அருளை
- ʿalayka
- عَلَيْكَ
- upon you
- உம்மீது
- wayahdiyaka
- وَيَهْدِيَكَ
- and guide you
- உமக்கு வழி காண்பிப்பதற்காகவும்
- ṣirāṭan mus'taqīman
- صِرَٰطًا مُّسْتَقِيمًا
- (to) a Path Straight
- நேரான பாதையை
Transliteration:
Liyaghfira lakal laahu maa taqaddama min zambika wa maa ta akhkhara wa yutimma ni'matahoo 'alaika wa yahdiyaka siraatam mustaqeema(QS. al-Fatḥ:2)
English Sahih International:
That Allah may forgive for you what preceded of your sin [i.e., errors] and what will follow and complete His favor upon you and guide you to a straight path (QS. Al-Fath, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்து வீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௨)
Jan Trust Foundation
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்கு மன்னிப்பதற்காகவும் அவனது அருளை உம் மீது முழுமைப்படுத்துவதற்காகவும் உமக்கு நேரான பாதையை வழி காண்பிப்பதற்காகவும்,