குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௮
Qur'an Surah Al-Fath Verse 18
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ لَقَدْ رَضِيَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِيْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًاۙ (الفتح : ٤٨)
- laqad
- لَّقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- raḍiya
- رَضِىَ
- Allah was pleased
- திருப்தி அடைந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah was pleased
- அல்லாஹ்
- ʿani l-mu'minīna
- عَنِ ٱلْمُؤْمِنِينَ
- with the believers
- நம்பிக்கையாளர்களை
- idh yubāyiʿūnaka
- إِذْ يُبَايِعُونَكَ
- when they pledged allegiance to you
- உம்மிடம் அவர்கள் விசுவாச வாக்குறுதி செய்தபோது
- taḥta l-shajarati
- تَحْتَ ٱلشَّجَرَةِ
- under the tree
- மரத்தின் கீழ்
- faʿalima
- فَعَلِمَ
- and He knew
- அவன் அறிந்தான்
- mā fī qulūbihim
- مَا فِى قُلُوبِهِمْ
- what (was) in their hearts
- அவர்களின் உள்ளங்களில் உள்ளதை
- fa-anzala
- فَأَنزَلَ
- so He sent down
- ஆகவே, இறக்கினான்
- l-sakīnata
- ٱلسَّكِينَةَ
- the tranquility
- அமைதியை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- upon them
- அவர்கள் மீது
- wa-athābahum
- وَأَثَٰبَهُمْ
- and rewarded them
- இன்னும் வெகுமதியாக கொடுத்தான்
- fatḥan
- فَتْحًا
- (with) a victory
- ஒரு வெற்றியை(யும்)
- qarīban
- قَرِيبًا
- near
- சமீபமான(து)
Transliteration:
Laqad radiyal laahu 'anil mu'mineena iz yubaayi 'oonaka tahtash shajarati fa'alima maa fee quloobihim fa anzalas sakeenata 'alaihim wa asaa bahum fat han qareebaa(QS. al-Fatḥ:18)
English Sahih International:
Certainly was Allah pleased with the believers when they pledged allegiance to you, [O Muhammad], under the tree, and He knew what was in their hearts, so He sent down tranquility upon them and rewarded them with an imminent conquest (QS. Al-Fath, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௮)
Jan Trust Foundation
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களை திருப்தி அடைந்தான், அவர்கள் உம்மிடம் மரத்தின் கீழ் விசுவாச வாக்குறுதி செய்தபோது. அவன் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை (உண்மையான எண்ணத்தையும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பையும்) அறிந்தான். ஆகவே, அவர்கள் மீது அமைதியை (நிம்மதியை, பொறுமையை, கண்ணியத்தை, மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை) இறக்கினான்; அவர்களுக்கு சமீபமான ஒரு வெற்றியையும் அவன் வெகுமதியாக கொடுத்தான்.