Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௭

Qur'an Surah Al-Fath Verse 17

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ ۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ وَمَنْ يَّتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا اَلِيْمًا ࣖ (الفتح : ٤٨)

laysa
لَّيْسَ
Not is
இல்லை
ʿalā l-aʿmā
عَلَى ٱلْأَعْمَىٰ
upon the blind
குருடர் மீது
ḥarajun
حَرَجٌ
any blame
சிரமம்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā l-aʿraji
عَلَى ٱلْأَعْرَجِ
on the lame
ஊனமானவர் மீது
ḥarajun
حَرَجٌ
any blame
சிரமம்
walā
وَلَا
and not
இல்லை
ʿalā l-marīḍi
عَلَى ٱلْمَرِيضِ
on the sick
நோயாளி மீது
ḥarajun
حَرَجٌۗ
any blame
சிரமம்
waman
وَمَن
And whoever
எவர்
yuṭiʿi
يُطِعِ
obeys
கீழ்ப்படிவாரோ
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
அவனது தூதருக்கும்
yud'khil'hu
يُدْخِلْهُ
He will admit him
அவரை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
(to) Gardens
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
flow
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath them
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
the rivers
நதிகள்
waman
وَمَن
but whoever
எவர்
yatawalla
يَتَوَلَّ
turns away
விலகுவாரோ
yuʿadhib'hu
يُعَذِّبْهُ
He will punish him
அவரை தண்டிப்பான்
ʿadhāban
عَذَابًا
(with) a punishment
தண்டனையால்
alīman
أَلِيمًا
painful
வலி தரக்கூடிய

Transliteration:

Laisa 'alal a'maa harajunw wa laa 'alal a'raji harajunw wa laa 'alal mareedi haraj' wa many yutil'il laaha wa Rasoolahoo yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru wa many yatawalla yu'azzibhu 'azaaban aleemaa (QS. al-Fatḥ:17)

English Sahih International:

There is not upon the blind any guilt or upon the lame any guilt or upon the ill any guilt [for remaining behind]. And whoever obeys Allah and His Messenger – He will admit him to gardens beneath which rivers flow; but whoever turns away – He will punish him with a painful punishment. (QS. Al-Fath, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(போருக்கு வராததைப் பற்றிக்) குருடன் மீது யாதொரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் யாதொரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் யாதொரு குற்றமுமில்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே வழிப்பட்டு, (போருக்கு உங்களுடன்) வருகின்றாரோ, அவரை (அல்லாஹ்) சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உங்களுக்கு வழிப்படாது போருக்கு உங்களுடன் வராது) புறக்கணிக்கின்றாரோ, அவரை மிக கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குருடர் மீது சிரமம் (நெருக்கடி) இல்லை, ஊனமானவர் மீது சிரமம் இல்லை, நோயாளி மீது சிரமம் இல்லை. (அவர்கள் போருக்கு வராமல் இருப்பது அவர்கள் மீது குற்றமாகாது.) எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படி(ந்து போருக்கு அழைக்கப்படும் போது போருக்கு வரு)வாரோ அவரை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (உடல் வலிமை இருந்தும்) எவர் (போருக்கு வராமல்) விலகுவாரோ அவரை வலி தரக்கூடிய தண்டனையால் அவன் தண்டிப்பான்.