குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௬
Qur'an Surah Al-Fath Verse 16
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لِّلْمُخَلَّفِيْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰى قَوْمٍ اُولِيْ بَأْسٍ شَدِيْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ يُسْلِمُوْنَ ۚ فَاِنْ تُطِيْعُوْا يُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُمْ مِّنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيْمًا (الفتح : ٤٨)
- qul
- قُل
- Say
- கூறுவீராக!
- lil'mukhallafīna
- لِّلْمُخَلَّفِينَ
- to those who remained behind
- பின்தங்கியவர்களை நோக்கி
- mina l-aʿrābi
- مِنَ ٱلْأَعْرَابِ
- of the Bedouins
- கிராமவாசிகளில்
- satud'ʿawna
- سَتُدْعَوْنَ
- "You will be called
- அழைக்கப்படுவீர்கள்
- ilā qawmin
- إِلَىٰ قَوْمٍ
- to a people
- கூட்டத்தின் பக்கம்
- ulī basin
- أُو۟لِى بَأْسٍ
- possessors of military might possessors of military might
- பலமுடைய(வர்கள்)
- shadīdin
- شَدِيدٍ
- great
- கடுமையான(து)
- tuqātilūnahum
- تُقَٰتِلُونَهُمْ
- you will fight them
- அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக
- aw yus'limūna
- أَوْ يُسْلِمُونَۖ
- or they will submit
- அல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காக
- fa-in tuṭīʿū
- فَإِن تُطِيعُوا۟
- Then if you obey
- நீங்கள் கீழ்ப்படிந்தால்
- yu'tikumu
- يُؤْتِكُمُ
- Allah will give you
- உங்களுக்கு கொடுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will give you
- அல்லாஹ்
- ajran
- أَجْرًا
- a reward
- கூலியை
- ḥasanan
- حَسَنًاۖ
- good
- அழகிய(து)
- wa-in tatawallaw
- وَإِن تَتَوَلَّوْا۟
- but if you turn away
- நீங்கள் விலகினால்
- kamā tawallaytum
- كَمَا تَوَلَّيْتُم
- as you turned away
- நீங்கள் விலகியதை போன்று
- min qablu
- مِّن قَبْلُ
- before before
- இதற்கு முன்பு
- yuʿadhib'kum
- يُعَذِّبْكُمْ
- He will punish you
- உங்களை தண்டிப்பான்
- ʿadhāban
- عَذَابًا
- (with) a punishment
- தண்டனையால்
- alīman
- أَلِيمًا
- painful"
- வலி தரக்கூடிய(து)
Transliteration:
Qul lilmukhallafeena minal A'raabi satud'awna ilaa qawmin ulee baasin shadeedin tuqaati loonahum aw yuslimoona fa in tutee'oo yu'tikumul laahu ajran hasananw wa in tatawallaw kamaa tawallaitum min qablu yu'azzibkum 'azaaban aleemaa(QS. al-Fatḥ:16)
English Sahih International:
Say to those who remained behind of the bedouins, "You will be called to [face] a people of great military might; you may fight them, or they will submit. So if you obey, Allah will give you a good reward; but if you turn away as you turned away before, He will punish you with a painful punishment." (QS. Al-Fath, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரையில், நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பி விட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிக கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்." (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்| “நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கிராமவாசிகளில் பின்தங்கியவர்களை நோக்கி கூறுவீராக! “நீங்கள் கடுமையான பலமுடைய ஒரு கூட்டத்தின் பக்கம் அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக அல்லது அவர்கள் பணிந்து விடுவதற்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் (அந்த அழைப்புக்கு) கீழ்ப்படிந்தால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை கொடுப்பான். இதற்கு முன்பு நீங்கள் விலகியதைப் போன்று (இப்போதும் போர் செய்யாமல்) விலகினால் அவன் உங்களை வலி தரக்கூடிய தண்டனையால் தண்டிப்பான்.