Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௪

Qur'an Surah Al-Fath Verse 14

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا (الفتح : ٤٨)

walillahi
وَلِلَّهِ
And for Allah
அல்லாஹ்விற்கே
mul'ku
مُلْكُ
(is the) kingdom
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
பூமியின்
yaghfiru
يَغْفِرُ
He forgives
மன்னிக்கின்றான்
liman yashāu
لِمَن يَشَآءُ
whom He wills
தான் நாடுகின்றவர்களை
wayuʿadhibu
وَيُعَذِّبُ
and punishes
இன்னும் வேதனை செய்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
whom He wills
தான் நாடுகின்றவர்களை
wakāna
وَكَانَ
And is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
மகாகருணையாளனாக

Transliteration:

Wa lillaahii mulkus samaawaati wal ard; yaghfiru limany yashaaa'u wa yu'azzibu many yashaaa'; wa kaanal laahu Ghafoorar Raheemaa (QS. al-Fatḥ:14)

English Sahih International:

And to Allah belongs the dominion of the heavens and the earth. He forgives whom He wills and punishes whom He wills. And ever is Allah Forgiving and Merciful. (QS. Al-Fath, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௪)

Jan Trust Foundation

மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன் தான் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றான்; தான் நாடுகின்றவர்களை வேதனை செய்கின்றான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கின்றான்.