குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௩
Qur'an Surah Al-Fath Verse 13
ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ لَّمْ يُؤْمِنْۢ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّآ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَعِيْرًا (الفتح : ٤٨)
- waman
- وَمَن
- And whoever
- எவர்(கள்)
- lam yu'min
- لَّمْ يُؤْمِنۢ
- (has) not believed (has) not believed
- நம்பிக்கை கொள்ளவில்லையோ
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை(யும்)
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- and His Messenger
- அவனது தூதரையும்
- fa-innā
- فَإِنَّآ
- then indeed, We
- நிச்சயமாக நாம்
- aʿtadnā
- أَعْتَدْنَا
- [We] have prepared
- தயார் செய்துள்ளோம்
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- saʿīran
- سَعِيرًا
- a Blazing Fire
- கொழுந்து விட்டெரியும் நரகத்தை
Transliteration:
Wa mal lam yu'mim billaahi wa Rasoolihee fainnaaa a'tadnaa lilkaafireena sa'eeraa(QS. al-Fatḥ:13)
English Sahih International:
And whoever has not believed in Allah and His Messenger – then indeed, We have prepared for the disbelievers a Blaze. (QS. Al-Fath, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௩)
Jan Trust Foundation
அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வில்லையோ நிச்சயமாக நாம் (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை தயார் செய்துள்ளோம்.