Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௦

Qur'an Surah Al-Fath Verse 10

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ يُبَايِعُوْنَكَ اِنَّمَا يُبَايِعُوْنَ اللّٰهَ ۗيَدُ اللّٰهِ فَوْقَ اَيْدِيْهِمْ ۚ فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا يَنْكُثُ عَلٰى نَفْسِهٖۚ وَمَنْ اَوْفٰى بِمَا عٰهَدَ عَلَيْهُ اللّٰهَ فَسَيُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا ࣖ (الفتح : ٤٨)

inna alladhīna yubāyiʿūnaka
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ
Indeed those who pledge allegiance to you
நிச்சயமாக/எவர்கள்/உம்மிடம் விசுவாச உறுதிமொழி செய்கின்றார்கள்
innamā yubāyiʿūna
إِنَّمَا يُبَايِعُونَ
only they pledge allegiance
அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம்
l-laha
ٱللَّهَ
(to) Allah
அல்லாஹ்விடம்தான்
yadu
يَدُ
(The) Hand
கை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fawqa
فَوْقَ
(is) over
மேல் இருக்கிறது
aydīhim
أَيْدِيهِمْۚ
their hands
அவர்களின் கைகளுக்கு
faman nakatha
فَمَن نَّكَثَ
Then whoever breaks (his oath)
ஆகவேயார் முறிப்பாரோ
fa-innamā yankuthu
فَإِنَّمَا يَنكُثُ
then only he breaks
அவர்முறிப்பதெல்லாம்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦۖ
against himself
தனக்கு எதிராகத்தான்
waman awfā
وَمَنْ أَوْفَىٰ
and whoever fulfils
யார் நிறைவேற்றுவாரோ
bimā ʿāhada
بِمَا عَٰهَدَ
what he has covenanted
எதை/ ஒப்பந்தம் செய்தாரோ
ʿalayhu
عَلَيْهُ
(with)
அதன் மீது
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விடம்
fasayu'tīhi
فَسَيُؤْتِيهِ
soon He will give him
அவருக்குக்
ajran
أَجْرًا
a reward
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
great
மகத்தான(து)

Transliteration:

Innal lazeena yubaayi'oonaka innamaa yubaayi'oonal laaha yadul laahi fawqa aydehim; faman nakasa fainnamaa yuankusu 'alaa nafsihee wa man awfaa bimaa 'aahada 'alihul laaha fasa yu'teehi ajran 'azeemaa (QS. al-Fatḥ:10)

English Sahih International:

Indeed, those who pledge allegiance to you, [O Muhammad] – they are actually pledging allegiance to Allah. The hand of Allah is over their hands. So he who breaks his word only breaks it to the detriment of himself. And he who fulfills that which he has promised Allah – He will give him a great reward. (QS. Al-Fath, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து உங்களுக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில்) உங்களுடைய கையைப் பிடித்து வாக்குறுதி செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகின்றானோ, அவன் தனக்குக் கேடாகவே அதனை முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதி சீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௦)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உம்மிடம் பைஅத் - விசுவாச உறுதிமொழி செய்தார்களே அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் இருக்கிறது. யார் முறிப்பாரோ அவர் முறிப்பதெல்லாம் தனக்கு எதிராகத்தான். (யார் இந்த ஒப்பந்தத்தை முறிப்பாரோ அது அவருக்குத்தான் கேடாகும்.) யார் அல்லாஹ் விடம் தான் எதன் மீது ஒப்பந்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவாரோ அவருக்கு அவன் மகத்தான கூலியை (-சொர்க்கத்தை) கொடுப்பான்.